Sunday, September 15, 2013

நடிகர் சல்மான் கான் தந்தையின் பேட்டி
நாடு முழுவதும் பேசப்படும் அவரது பேட்டி வருமாறு:
1. குஜராத் (2002) கலவரங்களை விட மோசமான, மும்பை கலவரம் நடந்த போது, மகாராஷ்டிரா முதல்வர் யார் என, யாருக்காவது நினைவிருக்கிறதா?
2. உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில், மலியானா, மீரட், பாகல்பூர், ஜாம்ஷெட்பூர் ஆகிய இடங்களில் கலவரம் நடந்தபோது, யார் முதல்வராக இருந்தார் என, நினைவிருக்கிறதா?
3. குஜராத்தில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு முன், பெரிய கலவரங்கள் நடந்த போது, முதல்வராக இருந்தவர்கள் யார் யார் என்பது, இப்போது சொல்லப்படுகிறதா?
4. டில்லியில், 1984ல் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம், படுகொலைகளின் போது, டில்லியின் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்தவர் யார் என்பது தெரியுமா?
5. நரேந்திர மோடியை, பேய், பிசாசைப் போல் வர்ணிப்பவர்கள், ஏன் மேற்சொன்ன, காங்கிரஸ் ஆட்சி கால நிகழ்வுகளை பேசுவதில்லை? நரேந்திர மோடியின் சாதனைகளை பற்றி ஏன் பேசுவதில்லை?
ஆசியாவின் மிகப் பெரிய சூரிய மின் திட்டம், குஜராத்தில் இருக்கிறது. மாநிலத்தில் எல்லா கிராமங்களிலும் தடையின்றி, 24 மணி நேரம் மின்சாரம் கிடைக்கிறது. "குஜராத் சாலைகள் சர்வதேச தரம் வாய்ந்தவை' என, உலக வங்கி சொல்கிறது. உலகில் வெகு வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில், ஆமதாபாத் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது."குஜராத்தில் தான், வேலையில்லா திண்டாட்டம் குறைவு' என்று, மத்திய அரசின் தொழில் துறை சொல்கிறது. கடந்த, 10 ஆண்டுகளில், எந்த சிறு கலவரமும் நிகழவில்லை. இந்தியாவின் தன்னிகரற்ற தலைவர் நரேந்திர மோடி என்று கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன. இந்த நேரத்தில் காங்கிரஸ் ஆட்சி காலக்கட்டத்தில், குஜராத்திலும், பிற மாநிலங்களிலும் நடந்த மதக் கலவரங்கள் பற்றிய புள்ளி விவரங்களை கொஞ்சம் புரட்டிப் பார்ப்போம்...
கடந்த, 1947ம் ஆண்டு வங்கக் கலவரத்தில், 5,000 பேர் கொல்லப்பட்டனர். 1964ல் ரூர்கேலா கலவரத்தில், 2,000 பேர்; 1987ல் ராஞ்சியில், 200 பேர்; 1969ல் ஆமதாபாத்தில், 512 பேர் பலியாகினர். 1970, 1985ல் பிவந்தி கலவரத்தில், 226 பேர்; 1980ல் மொராபாத் கலவரத்தில், 2,000 பேர்; 1983ல் அசாம் கலவரத்தில், 5,000 பேர்; 1984ல் டில்லி கலவரத்தில், 2,738 பேர் இறந்தனர்.கடந்த, 1985ல் குஜராத் கலவரத்தில், 300 பேர்; 1986ல் ஆமதாபாத் கலவரத்தில், 59 பேர்; 1982ல் மீரட் கலவரத்தில், 81 பேர்; 1992ல் சூரத் கலவரத்தில், 175 பேர் இறந்தனர்.கம்யூனிஸ்ட் ஆட்சியில், 1979ல் ஜாம்ஷெட்பூரில், 125 பேர் இறந்தனர்.காங்கிரஸ் கட்சி, தன் ஆட்சியில் நடந்த கலவரங்களை மறந்துவிட்டு, தங்கள் ஊழல்களை மூடி மறைப்பதற்காக, குஜராத் சம்பவம் ஒன்றை மட்டுமே, மீண்டும் மீண்டும் கூறி வருகிறது. காரணம், வேறு எதையும் குறிப்பிட்டு, அவர்களால் கூற முடியவில்லை.
குஜராத்தில், மோடியின் சாதனையை ஒதுக்கித் தள்ளும், காங்கிரஸ் கட்சியும், அதன் தோழமை கட்சிகளும், பொய்களை மட்டுமே தினமும் பரப்பி வருகின்றன. இவர்களை மீறி மோடி வெற்றி பெறுவது, அரசியல்வாதிகளை மீறி, "மக்கள்' வெற்றி பெறுவதாகும்.இவ்வாறு அவர் பேட்டியில் கூறி உள்ளார்.
இவர் ஒரு முஸ்லிம் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment