Sunday, September 15, 2013


உணர்ச்சிகரம்:
நரேந்திர மோடி, உணர்ச்சிகரமாக, தன் உரையைத் துவங்கினார். அவர் பேசியதாவது: இந்த கூட்டத்தில், ஏராளமான முன்னாள் ராணுவத்தினர் பங்கேற்று உள்ளனர். அவர்களுக்கு என் வணக்கங்கள். நம் எல்லைக்குள் புகுந்த பாக்., ராணுவத்தினர், நம் வீரர்களை சுட்டுக் கொன்றனர். ஆனால், நம் ராணுவ அமைச்சரோ, "பாக்., ராணுவத்தினர் இதை செய்யவில்லை; பாக்., ராணுவ சீருடையில் வந்த, பயங்கரவாதிகள் தான், இந்திய வீரர்களை கொலை செய்தனர்' என, பாகிஸ்தான் ராணுவத்துக்கு வக்காலத்து வாங்கினார். இதை விட, வெட்கக் கேடான விஷயம், வேறென்ன இருக்க முடியும். ஒரு பக்கம், பாகிஸ்தான் நம்மை அச்சுறுத்துகிறது; மற்றொரு புறம், சீனா மிரட்டுகிறது. நம் ராணுவம், பலவீனமாக இருப்பதால் தான், இதெல்லாம் நடக்கிறதா? இல்லவே இல்லை. ராணுவம் பலமாகத் தான் இருக்கிறது. மத்திய அரசே, பலவீனமாக உள்ளது. எல்லை பிரச்னைக்கு, மத்திய அரசே காரணம். பலவீனமான தலைமை இருந்தால், இப்படித் தான் நடக்கும். நாட்டின் பொருளாதாரம் தள்ளாடுகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்து விட்டன. மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளும்,தான் காரணம் என்றார் 

No comments:

Post a Comment