Tuesday, July 16, 2013

நீதிமான்களாக மாற்றுகிறது காங்., தன் சுக துக்கங்களை விட்டு, பெற்றோர், குழந்தைகளை விட்டு, கடும் பனியிலும், மிக மோசமான இயற்கை சூழ்நிலைகளிலும், எல்லையை காக்க போராடுகின்றனர், ராணுவ சகோதரர்கள்.சமீபத்தில், நம் ராணுவ வீரர்கள் இருவரை, மிக கொடூரமாக கொன்று, தலையை துண்டித்து வீசியது பாகிஸ்தானிய ராணுவம். இரண்டு வாரங்களுக்கு முன், காஷ்மீரில் எட்டு வீரர்களை கொன்றனர்.ஆளுகிற காங்கிரஸ் அரசு, இதற்கெல்லாம் ஒன்றும் அலட்டிக் கொள்ளவில்லை. எல்லையில், ராணுவ வீரர்கள் செத்தாலென்ன, பயங்கரவாதிகள் குண்டு வெ.ஆனால், 2004ல் குஜராத் போலீசாரால், "என்கவுன்டர்' செய்யப்பட்ட, "லஷ்கர்- இ-தொய்பா' அமைப்பால், "எங்கள் முதல் பெண் தியாகி' என்று அறிவிக்கப்பட்ட, இஷ்ரத் ஜகான் என்ற பெண்ணையும், உடன் சுட்டுக் கொல்லப்பட்ட, இரண்டு பாகிஸ்தானிய பயங்கரவாதிகளையும், நிரபராதிகளாக்க துடிக்கிறது, காங்கிரஸ்.முன், கோர்ட்டில் இஷ்ரத்தை பயங்கரவாதி என்று சொன்னதை, தற்போது மாற்றுகிறது.இதில் காட்டும் முனைப்பை, மும்பை, புனே, டில்லி மற்றும் நாடெங்கும் பயங்கரவாதிகளின் குண்டு வெடிப்பால், இறந்து போன அப்பாவி இந்தியர்களுக்காகவும்; இலங்கை கடல் எல்லையில் சுட்டுக் கொல்லப்படும், அப்பாவி தமிழ் மீனவர்களுக்காகவும் செய்யலாமே...இவர்களெல்லாம் மனிதர்களில்லையா... இவர்களுக்கு மனித நேயம் தேவையில்லையா?நரேந்திர மோடியை களங்கப்படுத்துவதற்காக, பாகிஸ்தானிய பயங்கரவாதிகளை, நீதிமான்களாக்க காங்கிரஸ் தயங்காது போலிருக்கிறது.

No comments:

Post a Comment