Tuesday, July 16, 2013

காங்கிரஸ் அரசு 2004இல் பதவி ஏற்றபோது, பெட்ரோல் விலை ரூபாய் 35.71 ஆக இருந்தது. இப்போது, 73.60 ஆக உள்ளது.

கடந்த 9 ஆண்டுகளில், சுமார் 110 சதவிகிதம் பெட்ரோல் விலையை உயர்த்தி இருக்கின்றது. ஒவ்வொரு முறையும் பெட்ரோல் விலை உயர்வுக்குக் கச்சா எண்ணெய் விலையைக் காரணம் காட்டுகிறார்கள். ஆனால், அண்டை நாடுகளிலும், ஆசியா, ஐரோப்பிய நாடுகளிலும் பெட்ரோல் விலை இந்தியாவைக் காட்டிலும் பன்மடங்கு குறைவாகவே உள்ளது.

இதனால், எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி, விலைவாசியும் ஏறிக்கொண்டே போகிறது. மத்திய அரசு விலைவாசி ஏற்றத்தை ஒரு பொருட்டாகக் கருதாமல், தொடர்ந்து அலட்சியப்படுத்திக்கொண்டே இருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து, ரூபாயின் மதிப்பை வீழ்ச்சி அடையச் செய்ததுதான் மன்மோகன் சிங் அரசின் சாதனை ஆகும்.

No comments:

Post a Comment