Monday, July 22, 2013

''இந்துக்களின் உயிர் மட்டும் மலிவானதா?

''இந்துக்களே நாம் ஒன்று சேர்வது இனி காலத்தின் கட்டாயம்''

நமது சொந்த மண்ணில் நமக்கு பாதுகாப்பு இல்லை'' இந்து என்று சொன்னால் மட்டும் மதவாதம் மற்ற மதத்தைச் சொன்னால் இதமானதா?'' இந்துக்களை எதிர்ப்பதே நடுநிலைமையா?
இதோ எங்கள் மண்ணில் ''இந்து' என்று சொன்ன ஒரே காரணத்திற்க்காக
உயிர் தியாகம் செய்தவர்களைப் பற்றிய ஒரு சிறிய பட்டியலைப் பாருங்கள்
30.08.1989: கோவையில் இந்துமுன்னணி செயலாளர் வீரகணேஷ் கொல்லப்பட்டார்.

05.09.1991: கோவை இந்து முன்னணியின் முக்கிய பொறுப்பாளர் சிவகுமார் அவரது வீட்டின் அருகிலேயே பட்டப்பகலில் கொல்லப்பட்டார்.

15.04.1995: கோவை பா.ஜ.க.பிரமுகர் ராஜேந்திரன் கொல்லப்பட்டார்.

31.12.1995: இந்து முன்னணி உறுப்பினர் கார்த்திகேயன் கோவை அருகிலுள்ள மேட்டுப்பாளையத்தில் கொல்லப்பட்டார்.

31.01.1997: கோவையில் ஏற்பட்ட கலவரத்தில் (20-01-1997 அன்று பொள்ளாச்சியில் ஜிகாத் கமிட்டி என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் பழனிபாபா கொலையை அடுத்து), செல்வபுரம் என்னுமிடத்தில் ஆட்டோ டிரைவர் ரகுபதி கொல்லப்பட்டார்.

03.02.1997: கோவையில் மரக்கடை என்னுமிடத்தின் அருகே சென்று கொண்டிருப்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் கிருஷ்ணசாமி (நெற்றியில் விபூதி-குங்குமம் வைத்திருந்தார் என்ற காரணத்திற்காக) கொல்லப்பட்டார்.

01.09.1997: மகேந்திரன், அருணாசலம், ரஜினி ரமேஷ் ஆகியோர் கோவையின் வெவ்வேறு இடங்களில் ஒரே நாளில் கொல்லப்பட்டனர்.

02.09.1997: திரிக்மரா ராம் (ஐந்து முனை), மூர்த்தி (போத்தனூர்), முருகன் (ஆசாத் நகர்), கண்ணன் ஆகியோர் வெவ்வேறு இடங்களில் கொல்லப்பட்டனர்.

1997: முஸ்லிம் பயங்கரவாதிகளை எதிர்த்த காரணத்துக்காக, உக்கடம் பகுதியில் கோட்டை அமீர் என்ற பெரியவர் கொல்லப்பட்டார். (இவரது பெயரில் தி.மு.க.அரசு, மதநல்லிணக்க விருது வழங்கி வருகிறது.)

1997: கோவை சிறையில் ஜெயிலர் பூபாலன் கொல்லப்பட்டார்.

29.11.1997: போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் உக்கடம் என்னுமிடத்தில் நடுரோட்டில், முஸ்லிம் இளைஞர்களின் தவறை சட்டப்படித் தட்டிக் கேட்டதற்காக, அவர்களால் கொல்லப்பட்டார்.

28.03.2002: ஆர்.எஸ்.எஸ். பிரசாரச் செயலாளர் முருகேசன், கோவையின் புறநகரான குனியமுத்தூரில், அவரது வீட்டருகிலேயே கொல்லப்பட்டார்.

இப்பட்டியலின் படி, கோவை மாவட்டத்தில் மட்டும் கடந்த இருபதே வருடங்களில், 17 பேர்கள் (ஒரு முஸ்லீம் நபர் உட்பட) பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். இதோடு மட்டுமல்லாமல் கொலைவெறித் தாக்குதலுக்கு உட்பட்டு பின்னர் தெய்வாதீனமாக உயிர் பிழைத்தோரும் உண்டு.

1982: கோவை, தேர்நிலைத்திடலில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தை அடுத்து, அதில் பங்கேற்ற ஜனா.கிருஷ்ணமுர்த்தி, நாராயண ராவ், திருக்கோவிலூர் சுந்தரம், டி.ஆர்.கோபாலன் ஆகியோர் இஸ்லாமியப் பயங்கரவாதிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இதில் திருக்கோவிலூர் சுந்தரம் பிழைப்பது அரும்செயலாகிவிட்டது.

18.07.1984: மதுரையில், இந்து முன்னணி மாநில அமைப்புச் செயலாளராக இருந்த திரு.ராம.கோபாலன்ஜி அவர்கள் அல் உம்மா தலைவன் பாஷாவால் தலையில் வெட்டப்பட்டார். இதில் தெய்வாதீனமாக கோபால்ஜி உயிர் தப்பினார்.

1988: கோவை- தியாகி குமரன் காய்கறி மார்க்கெட்டில் நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலில் நாராயணன், சக்திதாசன், சாமிநாதன் ஆகியோர் படுகாயம் அடைந்து, உயிர் தப்பினர்.

31.12.1995: இந்து முன்னணி ஆதரவாளரான டாக்டர் ஹிரியன் மேட்டுப்பாளையத்தில் அவரது கிளினிக்கில் தாக்கப்பட்டார். கத்திக்குத்துக் காயங்களுடன் அவர் உயிர் பிழைத்தார்.

மேலும், காவலர் செல்வராஜ் கொல்லப்பட்டதை அடுத்து, போலீசார் தங்களுக்கு பாதுகாப்பு கேட்டு மறியல் செய்தனர். தொடர் கலவரத்தில், இரு தரப்பிலும் பலர் உயிர் இழந்தனர்.

பின்னர் உச்சக்கட்டமாக, 14.02.1998 அன்று,மாபெரும் சதிச் செயலாக பா.ஜ.க. தலைவர் அத்வானியைக் குறிவைத்து கோவையில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதில் 46 அப்பாவி இந்துக்கள் உட்பட 60 பேர் பலியானார்கள்.

தமிழகத்தின் மற்ற பல மாவட்டங்களிலும் பல இந்துக்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்துள்ளனர். அவற்றுள் ஒரு சில:

மதுரை பேராசிரியர் பரமசிவம்
மதுரை பேராசிரியர் பரமசிவம்
28.03.1998: அகில பாரத வித்யார்த்தி பரிஷத்தின் மாநில துணைத் தலைவர் மதுரைக் கல்லூரி பேராசிரியர் கே.ஆர்.பரமசிவம் கொல்லப்பட்டார்.

02.02.1999: திருச்சி மாவட்ட பா.ஜ.க. தலைவர் டாக்டர்.பி.வி.ஸ்ரீதர் கொல்லப்பட்டார்.

21.06.2005: ஹிந்து மக்கள் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் ஆர்.காளிதாஸ் கொல்லப்பட்டார்.

17.12.2006: இந்து முன்னணி பொறுப்பாளர் குமார பாண்டியன் தென்காசியில் படுகொலைச் செய்யப்பட்டார்.

14.08.2007: குமார பாண்டியனின் சகோதரர்கள் மூவர் தென்காசியில் படுகொலைச் செய்யப்பட்டனர்.

2007 முதல் இன்று வரை எத்தனையோ இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.அரவிந்தன்,வெள்ளையப்பன்
இப்போது பாரதீய ஜனதா கட்சி மாநிலப் பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.
2007 முதல் 2013 வரை கொலை செய்யப் பட்ட இந்துக்களின் பட்டியலை பார்த்தாவது முற்போக்கு முகமூடிகளோடு
மக்களைப் பிரித்தாளும் சமூக விரோதிகள் தங்களின் மனசாட்சியை தொட்டு பார்க்கட்டும்.
இந்திய மண்ணில் சுதந்திரப் போரில் இழந்த உயிர்த் தியாகத்தைவிட சுதந்திர நாட்டில் இந்துக்களை இன்னும் இழந்து கொண்டிருப்பது,அநியாயத்திலும் அநியாயம்.
ஒன்றிணைவோம்

No comments:

Post a Comment