Monday, July 15, 2013

நாடு முன்னேற கல்விக்காக அதிகம் செலவிட வேண்டும்
-------------------ஸ்ரீமான் நமோ--------------------------------------
தேர்தல் ஆதாயம் கருதி, காங்., தலைமையிலான, மத்திய அரசு, உணவு பாதுகாப்பு மசோதாவை, அவசர சட்டத்தின் மூலம் நிறைவேற்றியுள்ளது.உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றினால் மட்டும், மக்களுக்கு உணவு கிடைத்து விடுமா?
நாட்டை, முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வதற்கு, கட்டமைப்பு வசதிகளை பெருக்க வேண்டும். கல்விக்காக, அதிகம் செலவிட வேண்டும்.
தற்போதுள்ள கல்வி முறையில், மாற்றம் செய்யப்பட வேண்டும். நம் அண்டை நாடான சீனா, கல்விக்காக, தன் மொத்த உள்நாட்டு உற்பத்தில், 20 சதவீதத்தை செலவிடுகிறது.
நம் நாட்டில், 7 சதவீதம் செலவிடப்படுவதாக, அரசு கூறுகிறது. ஆனால், வெறும், 4 சதவீதம் தான், செலவிடப்படுகிறது.இப்படி இருந்தால், நாடு, எப்படி முன்னேற்றம் அடையும்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை, சீனாவில், உலகத் தரம் வாய்ந்த பல்கலை கழகங்கள், எதுவும் இல்லை. இப்போது, 30க்கும் மேற்பட்ட, உலகத் தரம் வாய்ந்த பல்கலை கழகங்கள், அங்குள்ளன. ஆனால், இந்தியாவில், ஒரு பல்கலை மட்டுமே, உலகத் தரம் வாய்ந்ததாக உள்ளது.
தற்போதுள்ள, கல்வி முறையை மாற்றி, உலகத் தரம் வாய்ந்த கல்வி முறையை அமல்படுத்த வேண்டும். இந்தியாவை நவீன மயமாக்க வேண்டுமே தவிர, மேற்கத்திய மயமாக்கக் கூடாது.
பழங்காலத்தில், இந்தியாவில் குருகுல கல்வி இருந்தது.இதை கற்பதற்காக, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், இந்தியாவுக்கு வந்தனர். அப்போது, நம் நாட்டின் கல்வி முறை, சிறந்த மனிதர்களை உருவாக்குவதாக இருந்தது. தற்போது, பணம் சேர்க்கும் தொழிலாக, கல்வி முறை மாறி விட்டது.
ஒரு சிலர், அதிகாரத்தை கைப்பற்றுவதை மட்டுமே விரும்புகின்றனர். ஆனால், நாம், பொதுமக்களுக்கு அதிகாரம் கிடைப்பதற்காக, திட்டங்களை செயல்படுத்துகிறோம்.
நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில், 65 சதவீதம் பேர், 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களாக இருப்பது, நமக்கு கிடைத்த பெரும் வரம்.இந்த இளைஞர் சக்தியை பயன்படுத்தி, பல சாதனைகளை படைக்கலாம்.
தென் கொரியா, நம்மை விட, மிகச் சிறிய நாடு. ஆனால், குறுகிய காலத்தில், அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து விட்டது. சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை குவிப்பதுடன், ஒலிம்பிக் போன்ற, மிகப் பெரிய போட்டிகளை நடத்துகிறது.
ஆனால், நம்மால், காமன்வெல்த் போட்டிகளை கூட, முறையாக நடத்த முடியவில்லை. விளையாட்டு போட்டிக்காக ஒதுக்கப்பட்ட நிதியில், ஊழல் செய்து விட்டனர்.

No comments:

Post a Comment