Saturday, June 8, 2013



ராமநாதபுரம் பாரதீய ஜனதா பிரமுகர் திருமண மண்டபம் மீது இன்று காலை பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது.

ராமநாதபுரம் நகர் பாரதீய ஜனதா கட்சி தலைவராக இருந்து வருபவர் சூரியபிரகாஷ். இவருக்கு சொந்தமான திருமண மண்டபம் புதிய பஸ் நிலையத்திற்கும் வழிவிடுமுருகன் கோவிலுக்கம் இடையே உள்ளது. இந்த திருமண மண்டபம் மீது இன்று அதிகாலை மர்ம நபர்கள் 2 பெட்ரோல் குண்டுகளை வீசினர்.

பெட்ரோல் குண்டுகள் திருமண மண்டபத்தின் இரும்பு ஷட்டர்கள் மீது விழுந்ததால் பெரிய அளவில் தீ விபத்து ஏற்படவில்லை. ஷட்டர்கள் மட்டும் கருகியது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் திருமண மண்டப உரிமையாளர் சூரியபிரகாஷ், பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தை பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு சூரியபிரகாஷ் தனது குடும்பத்துடன் கேரள மாநிலத்திற்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் டெலிபோனில் தொடர்பு கொண்டு உனது திருமண மண்டபத்தை இந்து அமைப்புகளுக்கு கூட்டம் நடத்துவதற்கு விடக்கூடாது என்று கூறி மிரட்டி உள்ளார்.

சுற்றுலாவில் இருந்ததால் இந்த மிரட்டல் குறித்து சூரியபிரகாஷ் கவனம் செலுத்தாமல் இருந்துவிட்டார். மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்தான் பெட்ரோல் குண்டுகளை வீசி இருக்கலாம் என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்

No comments:

Post a Comment