Monday, February 10, 2014

மத ரீதியான இடஒதுக்கீடு சரியா, தவறா?



கல்வி மற்றும் வேலை வாய்ப்பில், இடஒதுக்கீடு, 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இருந்தாலும், முஸ்லிம்களுக்கு, 18 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கோரி வருகின்றன. இந்த இடஒதுக்கீட்டை அளிக்க வேண்டும் எனில், பிற்பட்ட வகுப்பினருக்கான, இடஒதுக்கீட்டில் தான், கை வைக்க வேண்டும். மேலும், மத
ரீதியாக இடஒதுக்கீடு அளிப்பது, அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என, பா.ஜ., பொதுச் செயலர், அமீத் ஷா கூறியுள்ளார். அவரின் கருத்து தொடர்பாக, இரு தரப்பைச் சேர்ந்த தலைவர்கள், முன்வைத்த வாதங்கள் இதோ:

நாட்டின் பெரும்பான்மை வாக்காளர்கள் இந்துக்கள். அவர்களே, எந்த தேர்தலாக இருந்தாலும், வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளனர். இருந்தும், இந்த சக்தியை உணரும் விழிப்புணர்வு, இந்துக்கள் மத்தியில் இல்லை. சிறுபான்மை மக்களை மகிழ்வித்து விட்டால் போதும், தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்ற, முடிவுக்கு வந்து, அந்த பிரிவினருக்கான சலுகைகளை அளிக்கின்றனர். இந்த அடிப்படையில் தான், கல்வி, வேலை வாய்ப்பில், 18 சதவீத இடஒதுக்கீடு, முஸ்லிம்களுக்கு அளிக்கப்படும் என்ற, வாக்குறுதியை காங்கிரஸ் அளிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் எதுவும் இதற்கு விதிவிலக்கல்ல. சிறுபான்மையினரின் மனதை குளிர வைத்தால் போதும் என, நினைக்கின்றனர். இதிலிருந்து வேறுபட்டவர், குஜராத் முதல்வர் மோடி. அவரிடம், குஜராத்தில் உள்ள சிறுபான்மையினருக்கு நீங்கள் எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே, என, கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், குஜராத்தில் உள்ள சிறுபான்மையினருக்கும் சரி, பெரும்பான்மையின ருக்கும் சரி, நான் எதுவும் செய்ய வில்லை. ஆனால், ஆறு கோடி குஜராத்தி களுக்கு செய்துள்ளேன், என்றார். இதன்மூலம், குஜராத்தில், சிறுபான்மை
யினர், பெரும்பான்மையினர் என்ற வேறுபாடில்லை, அனைவரும் குஜராத்திகள் என, தெளிவுபடுத்தினார்.
அதுபோல, இந்தியாவில், சிறுபான்மையினர், பெரும்பான்மையினர் என, யாருமில்லை. அனைவரும் இந்தியர்கள். அவர்களின் நலனுக்காகவே, அரசுகள் அமைய வேண்டும். அதற்கு, காங்கிரசை தோற்கடிக்கும் காலம் நெருங்கி விட்டது. நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி என்பது, அனைத்து இந்தியர்களும் முன்னேறுவதில் தான் உள்ளது. அதன் மூலமே, வல்லரசை உருவாக்க முடியும். இங்கு, ஜாதி, மதம் ஆகியவற்றுக்கு வேலையில்லை. குறிப்பிட்ட ஒரு சாராரை, ஓட்டுக்காக மகிழ்விக்க வேண்டிய வேலையும் இல்லை என்ற நிலை உருவாகும்.

ராமகோபாலன், இந்து முன்னணி அமைப்பாளர்

கல்வி, வேலைவாய்ப்பில் பின் தங்கியுள்ள, மத மற்றும் மொழி சிறுபான்மையினருக்கு, முன்னுரிமை அளிக்க வேண்டும் என, இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே, இடஒதுக்கீடு என்பது,
சலுகையல்ல; உரிமை. மத மற்றும் மொழி சிறுபான்மையின ரின், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு நிலையை ஆய்வு செய்ய, சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி, ரங்கநாத் மிஸ்ரா தலைமையில், தேசிய மத மற்றும் மொழி வழி சிறுபான்மையினர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம், விரிவான ஆய்வை மேற்கொண்டு, 2007 மே, 21ம் தேதி, பிரதமரிடம், அறிக்கையை சமர்பித்தது.
அந்த அறிக்கையில், மத மற்றும் மொழி வழி சிறுபான்மையினருக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், 15 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். அதில், 10 சதவீதம், முஸ்லிம்களுக்கு அளிக்க வேண்டும். இல்லையேல், 27 சதவீத பிற்பட்டோருக்கான ஒதுக்கீட்டில், 8 சதவீத ஒதுக்கீட்டை, முஸ்லிம்
களுக்கு அளிக்க வேண்டும் என, பரிந்துரைத்து உள்ளது. எனவே, பா.ஜ., பொதுச் செயலர் அமித் ஷா கூறுவது போல், முஸ்லிம்களுக்கு, 18 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் பரிந்துரைகள், அரசிடம் இல்லை. தமிழகத்தில், 50 சதவீத ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு அளிக்கப்பட்டது. இதில், 20 சதவீதத்தைப் பிரித்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அளித்தனர். அதனால், அவ்விரு சமூகங்களுக்கு இடையே மோதல் ஏற்படவில்லை. ஆனால், பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளித்து, பிற்படுத்தப்பட்டோரின் ஒதுக்கீட்டை பறிக்கின்றனர் என, அமித் ஷா போன்றவர்கள், இந்து, முஸ்லிம் இடையே மோதலை ஏற்படுத்தி, அதில், அரசியல் செய்ய முனைகின்றனர்.
ஒரு சமூகத்துக்கு அதன் உரிமையை அளிக்கும்போது, மற்றொரு சமூகத்தின் உரிமை பறிக்கப்படுகிறது என்ற அர்த்தமில்லை. இதை, முஸ்லிம்களும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் நன்கு புரிந்துள்ளனர்.

ஜவாஹிருல்லா, எம்.எல்.ஏ., மனிதநேய மக்கள் கட்

No comments:

Post a Comment