Tuesday, May 21, 2013

சுனாமி வீடுகளை வழங்கக்கோரி
பாரதீய ஜனதா கட்சியினர் போராட்டம்




சென்னை கலங்கரை விளக்கம் அருகே நொச்சிக்குப்பம், நொச்சி நகர் மீனவர் பகுதிகள் உள்ளன. சுனாமியின் போது இங்குள்ள மீனவ குடும்பத்தினர் வீடுகள் பாதிக்கப்பட்டது. சுமார் 1200 குடும்பங்கள் பாதிக்கப்பட்டதாக கணக்கிடப்பட்டு அவர்களுக்கு புதிய வீடு கட்ட அரசு முடிவு செய்தது. அது வரையில் அவர்கள் தற்காலிகமாக தங்க கூடாரம் அமைத்து கொடுத்து இருந்தனர்.
சுனாமி குடியிருப்பு வீடுகள் கட்டி முடிக்கப்பட்டும் அவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படவில்லை. இதனால் வெயில், மழை காலங்களில் அவர்கள் குடியிருக்க முடியாமல் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து மீனவர்களுக்கு கட்டப்பட்ட சுனாமி குடியிருப்புகளை ஒப்படைக்க கோரி பாரதீய ஜனதாவினர் 20.05.2013 திங்கள்கிழமை நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலங்கரை விளக்கம் அருகே பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பத்தினருடன் இணைந்து நடுரோட்டில் சமையல் செய்தனர். போராட்டத்திற்கு மண்டல தலைவர் மணி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் காளிதாஸ் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் வக்கீல் வானதி சீனிவாசன், நிர்வாகிகள் வாசுதேவன், பிரேம் ஆனந்த், ரமேஷ் அருண், வெங்கட்ராமன், லட்சுமி சுரேஷ், ராமநாதன், சரளா உள்பட 200 பேர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து அவர்கள் காமராஜர் சாலையில் போராட்டத்தில் ஈடுபட வந்தனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து வானதி சீனிவாசன் கூறும் போது, சுனாமியில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வீடு கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகி விட்டன. அந்த வீடுகளை அவர்களுக்கு ஒதுக்காமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். விரைந்து அவர்களுக்கு வீடுகளை ஒதுக்க வேண்டும் என்றார

No comments:

Post a Comment