Tuesday, May 21, 2013

சென்னை: பிரிவினைவாதம் பேசும் யாசின் மாலிக்கை தமிழ்நாட்டிற்குள் அனுமதிப்பது ஆபத்தானது என்று பாஜகவின் மாநிலத்தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.
கடலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று முன்தினம் நடந்த கருத்தரங்கில் காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் கலந்து கொண்டு பேசினார். அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பொன். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பிரச்சினையும் இலங்கை தமிழர் பிரச்சினையும் முற்றிலும் வேறுபட்டவை காஷ்மீருக்கு மத்திய அரசு சிறப்பு மாநில தகுதியை அளித்துள்ளது. ஆனால், இலங்கை தமிழர்களே இழந்துவிட்ட தங்களது உரிமைகளை மீட்டதற்காக போராடி வருகின்றனர். அதற்காக இந்திய அரசின் உதவிக்காக காத்திருக்கின்றனர்.
கலவரத்தால் பாதிக்கப்பட்ட தர்மபுரி மற்றும் மரக்காணத்திற்குள் அரசியல் கட்சி தலைவர்கள் நுழைவதற்கு கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், யாசின் மாலிக்கைப் போன்ற பிரிவினைவாதியை தமிழ் நாட்டிற்குள் அனுமதிப்பது ஆபத்தானது என்பதை தமிழ்நாடு அரசு புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment