Thursday, May 2, 2013

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், அதற்குரிய அறிகுறிகளும், பரபரப்பும் துவங்கி விட்டன.ஊழல் கடலில் உச்சி வரை மூழ்கி, மூச்சுத் திணறி தத்தளித்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு, நரேந்திரமோடி பெயரைக் கேட்டாலே சிம்மசொப்பனம் போல, அலறிப்புடைத்து எழும் நிலை ஏற்பட்டுள்ளது. நரேந்திர மோடியின் நிர்வாகத் திறமையால், குஜராத் தொடர்ந்து பெற்று வரும் முன்னேற்றமும், அதன் காரணமாக, நாடு முழுவதும் அவர் புகழ் மெல்ல பரவி வருவதும், காங்கிரஸ் வயிற்றில் புளியைக் கரைக்கிறது.மதவாதம் என்ற மழுங்கிப் போன அட்டைக்கத்தியை வீசி, மோடியை தாக்க முயற்சிக்கின்றனர்.ஆனால், எல்லா மதங்களும் சமம் என்பதே, உண்மையான மதச்சார்பற்ற நிலை என்ற கொள்கையை நரேந்திர மோடி கைக்கொள்வதால், குஜராத்தில் பெரும்பான்மையான இஸ்லாமியர்களே, பா.ஜ.,வுக்கு ஆதரவாகத் தான் ஓட்டளிக்கின்றனர் என்ற உண்மையை அவர்களால் மறைக்க முடியாது.பொதுவாக, வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை இழந்துவிடும் சூழ்நிலை தான் காணப்படுகிறது. இதனால் ஏற்படக்கூடிய பலாபலன்கள், பா.ஜ., கூட்டணிக்கு ஆதரவாகவே மாறும்.
அதேசமயம், நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக்கினால், நடுநிலையாளர் ஓட்டுகள் முழுக்க, பா.ஜ., கூட்டணிக்கு ஆதரவாக மாறி, பா.ஜ., தனிப் பெரும்பான்மை பெற்றாலும் வியப்பில்லை.குஜராத் பெற்ற, பெற்று வரும் முன்னேற்றத்தை, வளர்ச்சியை, இந்தியா முழுமையாகப் பெற்று, ஒரு வலிமையான சுயசார்பு நாடாக மாற, தன்னிகரற்ற உறுதியும், நிர்வாகத் திறமையும் கொண்ட நரேந்திர மோடி, பிரதமராக வரவேண்டியது, நாட்டின் அவசர அவசியமாகும்.

No comments:

Post a Comment