Wednesday, November 27, 2013

டைம் பத்திரிகையில் மோடிக்கு இடம் ; இந்த ஆண்டின் சிறந்த மனிதராக தேர்வாகிறார்...

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிரபல டைம் பத்திரிகை நடத்தும் ஓட்டெடுப்பில் சிறந்த மனிதருக்கான தேர்வில் இந்தியாவில் இருந்து ஒரே ஒரு அரசியல் தலைவராக நரேந்திர மோடி இடம் பிடித்துள்ளார். தற்போது இவருக்கு அதிக ஓட்டு விழுந்து வருவதாகவும், இவரே சிறந்த நபராக தேர்வாக வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆண்டுதோறும் டைம் பத்திரிகை உலக அளவிலான தலைவர்களை வரிசைப்படுத்தி சிறந்த மனிதர் பட்டத்திற்கு தேர்வு செய்து வருகிறது. இதன் அடிப்படையில் நடப்பு 2012 ம் ஆண்டுக்கான சிறந்த நபர்கள் யார் என 42 பேரை பட்டியலிட்டுள்ளது. இந்த பட்டியலில் அரசியல் தலைவர்கள் , தொழில்முனைவோர்கள், மற்றும் சமூக பணியாளர்கள் அடங்குவர்.

இதன்படி டைம் பத்திரிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமா, பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, தலிபான்ககள் எதிராக போராடி வரும் பாகிஸ்தானை சேர்ந்த சிறுமி மலாலாயூஷாப்ஷாய், ரஷ்ய அதிபர் புடின், ஜப்பான் பிரதமர் சின்சோ, நியூஜெர்சி கவர்னர் கிறிஸ் கிறிஸ்டி, டூவிட்டர் செயல் அதிகாரி கோஸ்டோலோ, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின், சிரியா அதிபர் பஷீர் அகமது, யாகூ தலைமை அலுவலர் மாரிசா, போப் பிரான்சிஸ், இங்கிலாந்து இளவரசர் ஜார்ஜ், அமேசான், தலைமை அலுவலர் ஜெப்பிசோஸ், அமெரிக்காவின் உளவு தகவல்களை வெளியிட்ட எட்வர்டு ஸ்னோவ்டன், ஜெர்மனி அதிபர் ஆஞ்சலே மார்க்கல், ஈரான் அதிபர் அசன்ரோஹனி, ஆஸ்கர் விருது பெற்ற ஆஞ்சலினா ஜோலி, அதிகாரி மாரிசா மேயர், ஆகியோர் முக்கியஸ்தர்கள்.


செய்திகளில் மோடி பிரபலம் : மோடி இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது குறித்து டைம் பத்திரிகை அளித்துள்ள விளக்கத்தில், சர்ச்சைக்குரிய இந்து தேசியவாதி மோடி ஜனநாயகம் போற்றும் இந்தியாவில் காங்கிரஸ் அரசை அகற்ற இந்தியர்கள் பலரும் விரும்பும் நபராக உள்ளார் என்று கூறியுள்ளது.


இந்தியாவில் இருந்து போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட ஒரே நபர் மோடி. நடந்து வரும் ஆன்லைன் ஒட்டெடுப்பில்37000ஒட்டுக்கள் விழுந்துள்ளது. சமீபத்தில் பதிவாகியுள்ள மொத்த ஓட்டில் இது 96 சதம் ஆகும்.

No comments:

Post a Comment