Saturday, November 9, 2013

Bjp Sakkudisrinivasan Yadav's photo.''நான், வித்தியாசமானவன். பயங்கரவாதிகளுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டேன். பயங்கரவாதிகளை வேரோடு வீழ்த்துவோம். நாட்டை வளர்ச்சி அடைய செய்வதற்காக, நாங்கள் எடுத்துள்ள சபதத்தை, பயங்கரவாதிகளின் துப்பாக்கி குண்டுகளால் முறியடிக்க முடியாது,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி, ஆவேசமாக பேசினார்.

பா.ஜ., பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் சென்று, தேர்தல் பிரசார கூட்டங்களில் பேசி வருகிறார். நேற்று, உ.பி., மாநிலம், பராய்ச்சில் நடந்த கூட்டத்தில், அவர், அனல் பறக்க பேசினார்.

அவர் பேசியதாவது:குஜராத்தில், தொடர்ச்சியாக, மூன்று முறை நடந்த சட்டசபை தேர்தல்களில், என்னையும், பா.ஜ.,வையும், எதிர்க்கட்சியினரால், தோற்கடிக்க முடியவில்லை. ஜனநாயக முறைப்படி, என்னை தோற்கடிக்க முடியாது என, அவர்களுக்கு புரிந்து விட்டது.

பொய் வழக்கு போட முயற்சி:

இதனால், வேறு மாதிரியான நடவடிக்கைகளின் மூலம், என்னை தோற்கடிக்க முயற்சிக்கின்றனர். சி.பி.ஐ., அமைப்பை, தவறாக பயன்படுத்தி, பொய் வழக்கு போட்டு, அதில் சிக்க வைக்க முயற்சிக்கின்றனர்.'இந்தியன் முஜாகிதீன்' போன்ற பயங்கரவாத அமைப்பினரை, சுதந்திரமாக நடமாட அனுமதி அளித்துள்ளனர். அதனால் தான், பாட்னாவில் நான் பங்கேற்ற கூட்டத்தில், அந்த அமைப்பினர், வெடி குண்டுகளை வெடிக்கச் செய்தனர். ஜனநாயக ரீதியாக வெற்றி பெற முடியாதவர்கள், துரோகிகளைப் போல், முதுகில் குத்துகின்றனர்.வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மூலம், அரசியல் செய்பவர்கள், ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.நான், வித்தியாசமானவன். பயங்கரவாதிகளுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டேன். பயங்கரவாதிகளை வேரோடு வீழ்த்துவோம். நாட்டை வளர்ச்சி அடைய செய்வதற்காக, நாங்கள் எடுத்துள்ள சபதத்தை, பயங்கரவாதிகளின் துப்பாக்கி குண்டுகளால், முறியடிக்க முடியாது. உ.பி.,யில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி அரசு, ஓட்டு வங்கி அரசியல் நடத்துகிறது.

அப்பாவிகள் கைது:

முசாபர் நகர் கலவரத்துக்கு காரணமான, உண்மையான குற்றவாளிகளை கைது செய்யாமல், அப்பாவிகளை கைது செய்கிறது. எங்கள் கட்சியின், இரண்டு எம்.எல்.ஏ.,க்களை கைது செய்துள்ளது. அவர்கள், ஒரு வழக்கிலிருந்து விடுதலையானால், மற்றொரு பொய் வழக்கில் கைது செய்கிறது. எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும், அத்தனையையும் முறியடிப்போம்.காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள், ஒரே மரபணுவைச் சேர்ந்தவை.இந்த கட்சிகள், தங்களின் சுய நலனுக்கு மட்டுமே செயல்படுபவை. சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும், உ.பி., மக்களின் நலனுக்காக செயல்படும் கட்சிகள் அல்ல. சி.பி.ஐ., வழக்குகளில் இருந்து, தங்களை பாதுகாக்கவே செயல்படுகின்றன. மத்தியில், அடுத்த தேர்தலில், பா.ஜ., ஆட்சி அமைத்தால், நாட்டு நலனுக்கு எதிராக செயல்படுவோர், மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, நரேந்திர மோடி பேசினார்.

No comments:

Post a Comment