Monday, April 22, 2013

நாணயத்தின் மறுபக்கம்

முன்பிருந்த இரண்டு ரூபாய் நாணயத்தில் தேசத்தின் படமும் அதன் முழுப்பரப்பிலும் விரிந்து பறக்கும் தேசியக்கொடியும் ஒருபுறம் இருக்க, மறுபுறம் அசோகமுத்திரையான சிங்கங்களும் அதன் கீழே "சத்யமேவ ஜெயதே" என்ற விருதுவாக்கும் கம்பீரமாக இடம்பெற்றிருந்தன. இப்போது இந்திய அரசு வெளியிட்டுள்ள இரண்டு ரூபாய் நாணயத்தில் கீழ்க்கண்ட மாற்றங்கள் உள்ளன (படம் 1):

படம் 1: சிலுவைக்கே முதலிடம்- அசோகச்சின்னம் குறுக்கப்பட்டது
- தேசத்தின் படமும் தேசியக்கொடியும் அறவே நீக்கப்பட்டு விட்டன.
- அசோக முத்திரை உள்ள பக்கம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு அந்த மூன்றில் ஒரு பகுதியில் (நடுப்பகுதியில்) அளவில் சுருக்கப்பட்டு 2 என்ற எண்ணுடன் இடத்தை பகிர்ந்து கொண்டபடி அசோகச்சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.
- அசோகச்சின்னமே அளவில் சிறிதாக்கப்பட்டு விட்டதால், அதன் கீழே உள்ள "சத்யமேவ ஜெயதே" என்ற வாக்கியம் லென்ஸ் வைத்துப்பார்க்க வேண்டிய அளவிற்கு மிகமிகச்சிறியதாகக் குறுக்கப்பட்டுள்ளது.
- ஆனால், நாணயத்தின் மறுபுறத்திலோ மிகத் தெளிவாகவும் பெரிதாகவும் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பகுதியை ஆக்கிரமிக்கும் வகையில் சிலுவைச்சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது- அதுவும் "ஜெருசலேம் சிலுவை" என்றும் குருசடிச்சிலுவை என்று அறியப்படும் "crusader's cross"

இந்த சின்னத்தின் மூலாதாரம் 9-ஆம் நூற்றாண்டின் கிறித்துவ மன்னன் லூயியின் (Louis the Pious) நாணயத்தில் உள்ளது. (படம் 2: "லூயி மன்னனின் கிறித்துவ நாணயம்").

இதில் உள்ள பெசன்ட் எனப்படும் நாற்புள்ளிகளுக்கு- நான்கு திசைகளிலும் சென்று கிறித்துவின் நற்செய்தி பரப்பவேண்டிய அவசியத்தைச் சுட்டுவது; மற்றும் மத்தேயு, மார்க், லூக்கா, யோவான், என்ற நான்கு முக்கிய கிறித்துவ நற்செய்தி லிபியங்களைக் குறிப்பது - என்று இரண்டு வகை விளக்கங்கள் முக்கியமாகத் தரப்படுகின்றன. இந்த சின்னமே பின்னர் ஜெருசலேம் சிலுவையாக மாறி முஸ்லீம்களிடமிருந்து ஜெருசலேத்தை மீட்க போப் இரண்டாம் அர்பன் தொடுத்த முதல் சிலுவைப்போரில் கிறித்துவப் படையின் ஆயுதச்சின்னமாக விளங்கியது. முதல் சிலுவைப்போரில் முஸ்லீம்களை வென்று வாகை சூடிய காரணத்தால் குருசடிச்சிலுவை எனவும் அறியப்பட்டது (படம் 3).

படம் 3: ஜெருசலேம் சிலுவை

இந்த இடைக்கால ஐரோப்பாவின் கிறித்துவ சின்னத்தை, இஸ்லாமியருக்கெதிரான கிறித்துவத்தின் அன்றைய போர்ச்சின்னத்தை இந்திய அரசாங்கம் இப்போது ஏன் தூசி தட்டி எடுத்து இந்திய நாணயத்தில் பொறிக்க வேண்டும்? இது குறித்து நாணயக்கிடங்குகளுக்கு (மின்ட்) எழுதியதற்கு எனக்கு வந்த பதில்: " The cross is not a catholic cross but it is the concept shows (sic) a stylised representation of unity in diversity, a defining characteristic of our country. The symbol may be seen as four heads sharing a common body. It may be thought of as people from all four parts of the country coming together under one banner and identifying with one nation". அதாவது வேற்றுமையில் ஒற்றுமை என்பதைக்காட்டும் வகையில் நாற்புற மக்களையும் ஒன்றிணைப்பதைக் குறிக்கும் சின்னமாம். இது போன்ற மர்மக்குறியீட்டை சமீபத்தில் "டாவின்சி கோட்" நாவலைத் தவிர வேறெங்கிலும் நான் படித்ததில்லை. அசோகச்சின்னம்தான் அளவில் குறுக்கப்பட்டது , சிலுவையிருக்கும் பக்கத்தில்தான் ஏகப்பட்ட இடம் இருக்கிறதே, வேற்றுமையில் ஒற்றுமை என்பதைக் காட்டும் சின்னம் என்றால் குறைந்தது அச்சின்னத்துக்குக் கீழே அதனை எழுதித் தொலைக்கவாவது செய்திருக்கலாமே? இரண்டு ரூபாய் நாணயம் சாதாரணர்களிடையே மிக அதிகம் புழங்கும் நாணயம்; அவர்களுக்கெங்கே இதைப்படிக்கவெல்லாம் தெரியப்போகிறது என்று விட்டு விட்டார்கள் போலிருக்கிறது. ஆனால், சாதாரணனுக்கு பார்த்தவுடன் இதில் உள்ள ஸ்டைலைஸ்டு கருத்து, வேற்றுமையில் ஒற்றுமை என்ற மர்மச்செய்தி எல்லாம் புரிந்து விடுமா என்றால் ஒரு இழவும் புரியப்போவதில்லை; ஆனால், பார்த்ததும் "அட சிலுவை!" என்று சட்டெனப் புரிந்துவிடும்தான். இச்சின்னத்திற்கும் வேற்றுமையில் ஒற்றுமைக்கும் அதிகத் தொடர்பா, அல்லது கிறித்துவ சிலுவைக்கும் அதிகத் தொடர்பா என்பதைப் படிப்பவர் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

கோவிலை வியாபாரத்தலமாக்குவதை எதிர்த்து வியாபாரிகளை ஏசு அடித்து விரட்டியடித்ததாக பைபிள் கதையொன்றில் படித்திருக்கிறேன். நாணயத்தில் போர்ச்சின்னச் சிலுவைக்குறியைப் பார்க்கையில், சிலுவை என்ற சின்னம் ஆதிக்கப்போரின் குறியீடாகத்தொடங்கி அழிவின் குறியீடாகவும் வியாபாரத்தின் குறியீடாகவும் ஆகிப் போயிருப்பதுதான் கண்கூடாகத்தெரிகிறது. ஏசு என்ற குறியீட்டின் மேல் உண்மையில் நம்பிக்கை கொண்டவர்க்கு சிலுவை என்ற சின்னம் காசில் கைமாறுவது உவப்பானதாய் இருக்கும் எனத் தோன்றவில்லை. சிறிதே வரலாறு அறிந்த முஸ்லீம்களுக்கும் குருசடிப் போர்களின் கிறித்துவ வெற்றிச் சின்னமானது பெருமிதம் தரப்போவது இல்லை. இந்துக்கள் மட்டுமே வழக்கம்போல் "ஆஹா! நமது பரந்த மனப்பான்மையைக் காட்ட மீண்டும் ஒரு அரிய வாய்ப்பு கிட்டி விட்டது" என்று இதனைக் கொண்டாடுவர் என்று அரசு எண்ணியதோ என்னவோ தெரியவில்லை. எப்படியிருந்தாலும் இதில் என்ன வேற்றுமையில் ஒற்றுமை என்ற வெற்று பம்மாத்து, வெங்காயம் எல்லாம் வேண்டிக் கிடக்கிறது? நிற்க.

ஒருவேளை சிலுவைச் செய்தியை இந்துப்பாவிகளிடத்தில் கொண்டு சேர்ப்பதுதான் இந்த சின்னத்தை வடிவமைத்த நிறுவனத்தின் நோக்கமோ என்ற சந்தேகம் எழவே டிசைன் செய்தது யாரென விசாரிக்க "நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிசைன், அகமதாபாத்"தான் இதனை வடிவமைத்த அமைப்பு என இந்திய அரசின் சார்பில் "மின்ட்"டிடமிருந்து பதில் வந்தது. படைப்புத்திறனோ அழகியலோ சிறிதும் இன்றி, முந்தைய நாணயத்திலுள்ளது போன்ற இன்ஸ்பிரேஷன் தரும் கலையுணர்வோ, கற்பனையோ எதுவும் இன்றி, இப்படி ஒரு சிலுவை நாணயத்தை வடிவமைக்க இந்தியாவின் முதன்மை வடிவமைப்பு நிறுவனம் எதற்கு, லோக்கல் பங்குத்தந்தை போதுமே என்ற கேள்வி எழ, 'கேரளக் கிறித்துவர் போலிருக்கிறதே, இச்சின்னம் பற்றியும் இதன் வடிவமைப்பின் பின்புலம் குறித்தும் கூடுதல் தகவல் தெரிந்திருக்கும்' என்ற நம்பிக்கையில் அந்த நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் டார்லி கோஷி தொடர்பு கொண்டால் பதில் ஏதும் இல்லை. 

https://www.facebook.com/jananayagam (இதுதான் ஜனநாயகமா?)
நன்றி அருணகிரி
நாணயத்தின் மறுபக்கம்

முன்பிருந்த இரண்டு ரூபாய் நாணயத்தில் தேசத்தின் படமும் அதன் முழுப்பரப்பிலும் விரிந்து பறக்கும் தேசியக்கொடியும் ஒருபுறம் இருக்க, மறுபுறம் அசோகமுத்திரையான சிங்கங்களும் அதன் கீழே "சத்யமேவ ஜெயதே" என்ற விருதுவாக்கும் கம்பீரமாக இடம்பெற்றிருந்தன. இப்போது இந்திய அரசு வெளியிட்டுள்ள இரண்டு ரூபாய் நாணயத்தில் கீழ்க்கண்ட மாற்றங்கள் உள்ளன (படம் 1):

படம் 1: சிலுவைக்கே முதலிடம்- அசோகச்சின்னம் குறுக்கப்பட்டது
- தேசத்தின் படமும் தேசியக்கொடியும் அறவே நீக்கப்பட்டு விட்டன.
- அசோக முத்திரை உள்ள பக்கம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு அந்த மூன்றில் ஒரு பகுதியில் (நடுப்பகுதியில்) அளவில் சுருக்கப்பட்டு 2 என்ற எண்ணுடன் இடத்தை பகிர்ந்து கொண்டபடி அசோகச்சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.
- அசோகச்சின்னமே அளவில் சிறிதாக்கப்பட்டு விட்டதால், அதன் கீழே உள்ள "சத்யமேவ ஜெயதே" என்ற வாக்கியம் லென்ஸ் வைத்துப்பார்க்க வேண்டிய அளவிற்கு மிகமிகச்சிறியதாகக் குறுக்கப்பட்டுள்ளது.
- ஆனால், நாணயத்தின் மறுபுறத்திலோ மிகத் தெளிவாகவும் பெரிதாகவும் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பகுதியை ஆக்கிரமிக்கும் வகையில் சிலுவைச்சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது- அதுவும் "ஜெருசலேம் சிலுவை" என்றும் குருசடிச்சிலுவை என்று அறியப்படும் "crusader's cross"

இந்த சின்னத்தின் மூலாதாரம் 9-ஆம் நூற்றாண்டின் கிறித்துவ மன்னன் லூயியின் (Louis the Pious) நாணயத்தில் உள்ளது. (படம் 2: "லூயி மன்னனின் கிறித்துவ நாணயம்").

இதில் உள்ள பெசன்ட் எனப்படும் நாற்புள்ளிகளுக்கு- நான்கு திசைகளிலும் சென்று கிறித்துவின் நற்செய்தி பரப்பவேண்டிய அவசியத்தைச் சுட்டுவது; மற்றும் மத்தேயு, மார்க், லூக்கா, யோவான், என்ற நான்கு முக்கிய கிறித்துவ நற்செய்தி லிபியங்களைக் குறிப்பது - என்று இரண்டு வகை விளக்கங்கள் முக்கியமாகத் தரப்படுகின்றன. இந்த சின்னமே பின்னர் ஜெருசலேம் சிலுவையாக மாறி முஸ்லீம்களிடமிருந்து ஜெருசலேத்தை மீட்க போப் இரண்டாம் அர்பன் தொடுத்த முதல் சிலுவைப்போரில் கிறித்துவப் படையின் ஆயுதச்சின்னமாக விளங்கியது. முதல் சிலுவைப்போரில் முஸ்லீம்களை வென்று வாகை சூடிய காரணத்தால் குருசடிச்சிலுவை எனவும் அறியப்பட்டது (படம் 3).

படம் 3: ஜெருசலேம் சிலுவை

இந்த இடைக்கால ஐரோப்பாவின் கிறித்துவ சின்னத்தை, இஸ்லாமியருக்கெதிரான கிறித்துவத்தின் அன்றைய போர்ச்சின்னத்தை இந்திய அரசாங்கம் இப்போது ஏன் தூசி தட்டி எடுத்து இந்திய நாணயத்தில் பொறிக்க வேண்டும்? இது குறித்து நாணயக்கிடங்குகளுக்கு (மின்ட்) எழுதியதற்கு எனக்கு வந்த பதில்: " The cross is not a catholic cross but it is the concept shows (sic) a stylised representation of unity in diversity, a defining characteristic of our country. The symbol may be seen as four heads sharing a common body. It may be thought of as people from all four parts of the country coming together under one banner and identifying with one nation". அதாவது வேற்றுமையில் ஒற்றுமை என்பதைக்காட்டும் வகையில் நாற்புற மக்களையும் ஒன்றிணைப்பதைக் குறிக்கும் சின்னமாம். இது போன்ற மர்மக்குறியீட்டை சமீபத்தில் "டாவின்சி கோட்" நாவலைத் தவிர வேறெங்கிலும் நான் படித்ததில்லை. அசோகச்சின்னம்தான் அளவில் குறுக்கப்பட்டது , சிலுவையிருக்கும் பக்கத்தில்தான் ஏகப்பட்ட இடம் இருக்கிறதே, வேற்றுமையில் ஒற்றுமை என்பதைக் காட்டும் சின்னம் என்றால் குறைந்தது அச்சின்னத்துக்குக் கீழே அதனை எழுதித் தொலைக்கவாவது செய்திருக்கலாமே? இரண்டு ரூபாய் நாணயம் சாதாரணர்களிடையே மிக அதிகம் புழங்கும் நாணயம்; அவர்களுக்கெங்கே இதைப்படிக்கவெல்லாம் தெரியப்போகிறது என்று விட்டு விட்டார்கள் போலிருக்கிறது. ஆனால், சாதாரணனுக்கு பார்த்தவுடன் இதில் உள்ள ஸ்டைலைஸ்டு கருத்து, வேற்றுமையில் ஒற்றுமை என்ற மர்மச்செய்தி எல்லாம் புரிந்து விடுமா என்றால் ஒரு இழவும் புரியப்போவதில்லை; ஆனால், பார்த்ததும் "அட சிலுவை!" என்று சட்டெனப் புரிந்துவிடும்தான். இச்சின்னத்திற்கும் வேற்றுமையில் ஒற்றுமைக்கும் அதிகத் தொடர்பா, அல்லது கிறித்துவ சிலுவைக்கும் அதிகத் தொடர்பா என்பதைப் படிப்பவர் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

கோவிலை வியாபாரத்தலமாக்குவதை எதிர்த்து வியாபாரிகளை ஏசு அடித்து விரட்டியடித்ததாக பைபிள் கதையொன்றில் படித்திருக்கிறேன். நாணயத்தில் போர்ச்சின்னச் சிலுவைக்குறியைப் பார்க்கையில், சிலுவை என்ற சின்னம் ஆதிக்கப்போரின் குறியீடாகத்தொடங்கி அழிவின் குறியீடாகவும் வியாபாரத்தின் குறியீடாகவும் ஆகிப் போயிருப்பதுதான் கண்கூடாகத்தெரிகிறது. ஏசு என்ற குறியீட்டின் மேல் உண்மையில் நம்பிக்கை கொண்டவர்க்கு சிலுவை என்ற சின்னம் காசில் கைமாறுவது உவப்பானதாய் இருக்கும் எனத் தோன்றவில்லை. சிறிதே வரலாறு அறிந்த முஸ்லீம்களுக்கும் குருசடிப் போர்களின் கிறித்துவ வெற்றிச் சின்னமானது பெருமிதம் தரப்போவது இல்லை. இந்துக்கள் மட்டுமே வழக்கம்போல் "ஆஹா! நமது பரந்த மனப்பான்மையைக் காட்ட மீண்டும் ஒரு அரிய வாய்ப்பு கிட்டி விட்டது" என்று இதனைக் கொண்டாடுவர் என்று அரசு எண்ணியதோ என்னவோ தெரியவில்லை. எப்படியிருந்தாலும் இதில் என்ன வேற்றுமையில் ஒற்றுமை என்ற வெற்று பம்மாத்து, வெங்காயம் எல்லாம் வேண்டிக் கிடக்கிறது? நிற்க.

ஒருவேளை சிலுவைச் செய்தியை இந்துப்பாவிகளிடத்தில் கொண்டு சேர்ப்பதுதான் இந்த சின்னத்தை வடிவமைத்த நிறுவனத்தின் நோக்கமோ என்ற சந்தேகம் எழவே டிசைன் செய்தது யாரென விசாரிக்க "நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிசைன், அகமதாபாத்"தான் இதனை வடிவமைத்த அமைப்பு என இந்திய அரசின் சார்பில் "மின்ட்"டிடமிருந்து பதில் வந்தது. படைப்புத்திறனோ அழகியலோ சிறிதும் இன்றி, முந்தைய நாணயத்திலுள்ளது போன்ற இன்ஸ்பிரேஷன் தரும் கலையுணர்வோ, கற்பனையோ எதுவும் இன்றி, இப்படி ஒரு சிலுவை நாணயத்தை வடிவமைக்க இந்தியாவின் முதன்மை வடிவமைப்பு நிறுவனம் எதற்கு, லோக்கல் பங்குத்தந்தை போதுமே என்ற கேள்வி எழ, 'கேரளக் கிறித்துவர் போலிருக்கிறதே, இச்சின்னம் பற்றியும் இதன் வடிவமைப்பின் பின்புலம் குறித்தும் கூடுதல் தகவல் தெரிந்திருக்கும்' என்ற நம்பிக்கையில் அந்த நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் டார்லி கோஷி தொடர்பு கொண்டால் பதில் ஏதும் இல்ல

No comments:

Post a Comment