Tuesday, May 27, 2014

                                   அகண்ட பாரதம் அமைப்போம் இனி
கண்ணா இது வெறும் ட்ரெய்லர் தான் மெய்ன் பிக்ட்சர் இன்னும் நிறையவே இருக்கு...

1600களில் நாஸ்ட்ராடாமஸ் மேற்கத்திய நாடுகள் பற்றி வௌியிட்ட தீர்க்க தரிசனங்களை புகழ்ந்த மேலை நாடுகள் காலனி நாடுகளின் ஆதிக்கத்தில் சிக்கித் தவித்த இந்தியா பற்றி நாஸ்ட்ராடாமஸ் தெரிவித்த கருத்துக்களை ஏளனம் செய்தன...ஏனென்றால் அவர் சொன்னது ஒரு கடலின் பெயரில் அமைந்த நாடும்,மதமும் உலகையாளும் என்று...கிருஸ்த்துவம்,இஸ்லாம்,புத்தம்,சொராஸ்ட்ரியனிசம் என்று எம்மதமும் கடலின் பெயரில் அமையவில்லை இந்தியாவின் இந்து மதத்தைத் தவிர(இந்து மகா சமுத்திரம்)...மேலும் உலகின் எந்த நாட்டுக்கும் இல்லாத பெருமை நம் இந்தியாவிற்கு மட்டுமே உண்டு உலகின் பெரும் சமுத்திரங்களில் இந்தியா மட்டுமே தன் பெயரைக் கொண்டுள்ளது(indian ocean)...இதன் மூலம் இந்தியா தான் உலகின் மிகவும் பழமையான நாடென்ற கருத்து மேலை நாடுகள் மத்தியில் முன்பே இருந்தது...இந்தியாவின் பலம் குன்றியிருந்த போது வாஸ்கோடா காமா இந்தியாவைக் கண்டுபிடித்தார் என்று மேலை நாட்டினர் பறை சாற்றினர் ஆனால் இவர்கள் மறைத்தது வாஸ்கோடாகாமவின் கப்பலை போர்ச்சுக்கல்லில் இருந்து இந்தியா வரை அழைத்துச் சென்ற கப்பல் மாலுமியே ஒரு குஜராத்தி என்ற இந்தியன் என்று இதெல்லாம் நாம் அன்றைய காலத்தில் வௌியே கூற முடியாத நிலையில் இருந்தோம் ஏனென்றால் அக்காலத்தில் முகலாயர் ஆட்சியிலும் பின்னர் ஐரோப்பிய காலனியாதிக்கத்திலும் இருந்தோம்...இதை வைத்து தான் மேலை நாட்டினர் நாஸ்ட்ராடாமஸ் நம் நாட்டைப் பற்றி கணித்ததை ஏளனம் செய்தன ஆனால் அன்று அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை பிற்காலத்தில் ஒரு நரேந்திரன் இழந்த இந்து மதத்தின் பெருமையை மேற்குலகின் மத்தியில் நிலை பெறச் செய்வான் இன்னொரு நரேந்திரன் இழந்த இந்தியாவின் பெருமையை மேற்குலகின் மத்தியில் நிலை பெற செய்வான் என்று(ஜெர்மானிய பிரதமர் மோடி பிரதமராவதற்கு முன்பே தம் நாட்டுக்கு மோடி வர விசா தேவையேயில்லை என்று சொன்னதே சாட்சி)...

நாஸ்ட்ராடாமஸ் இந்தியாவைப் பற்றி சொன்ன இன்னொரு குறிப்பு முப்புரமும் முக்கடலால் சூழப்பட்ட பகுதியில் இருந்து வரும் ஒருவன் உலகையாள்வான் என்று...தற்போதைய நிலையில் உலகில் மூன்று புறமும் கடல் சூழ்ந்த பகுதி இந்தியாவின் திராவிட தேசப்பகுதியான தென்னிந்தியா மட்டுமே(அரபிக்கடல்,வங்கக்கடல்,இந்தியப் பெருங்கடல்) நாஸ்ட்ராடாமஸ் குறிப்பிட்ட உலகின் தலைவனாகப் போகிறவனின் அடையாளமும் நம் நாட்டுப் பகுதியோடு ஒத்துப் போகிறது...நாஸ்ட்ராடாமஸ் மனிதர்களை குறிப்பதற்கு மனு என்ற சொல்லை ஃப்ரென்ச்சில் குறிப்பிட்டுள்ளார் மனு என்பது இந்து புராணங்களின் படி மனித குல தோன்றலாகிய முற்கால திராவிட தேசத்தையாண்ட சத்தியவிரதனைக் குறிக்கும் சொல் இந்த சொல்லே மனிதன்,மனுஷ்ய,man என்ற அனைத்து மொழி சொற்களின் மூலம்,உலகின் அனைத்து இன,நாட்டு மக்களிடமும் ஒரு புராண கதையிருக்கும் (தம்முடைய மூதாதையர் ஆழிப் பெருங்கடலில் ஒரு கப்பலில் தத்தளித்து வந்து தம் நாடு வந்தடைந்தனர் என்று)...உதாரணத்திற்கு கிருஸ்த்துவத்தின் noah's arkஐயும்,எகிப்து புராண கதையையும் சொல்லலாம் ...எகிப்தியர் நாகரிக வளர்ச்சியடைந்த தம் மூதாதையர் தென்கிழக்கு கடல் பகுதியில் உள்ள punt என்ற பகுதியிலிருந்து வந்துள்ளதாக குறிப்பிடுவர்...punt என்பது பண்டு எனப்படும் பாண்டிய நாட்டையே குறிக்கும்...ஆக உலக மக்களின் மூதாதையரே நாம் தான் என பெருமிதம் கொள்ளலாம்...

நாஸ்ட்ராடாமஸின் இன்னொரு கணிப்பு சொல்வது வருங்காலத்தில் ஐந்து நதி ஒன்று சேரும் நிலப்பகுதி இந்தியாவின் குண்டுகளால் துளைத்தெறியப்படும் என்று ...உலகில் ஐந்து நதி (சிந்து,ஜீலம்,சத்லெட்ஜ்,ரவி,பியாஸ்)ஒன்று சேர்ந்து பாயும் பகுதி பாகிஸ்தான் தான்...இந்நிகழ்விற்கு பின் இந்தியா காலனியாதிக்கத்தால் இழந்த தன் பண்டைய பாரத பகுதிகளை படிப்படியாக மீட்கும்...

நாஸ்ட்ராடாமஸின் இந்தியா பற்றிய கணிப்புகள் ஒவ்வொன்றும் மெய்யாகும் நாளைக் காண ஆவலாக இருப்போம்...


1 comment: