Tuesday, December 3, 2013

ரகசியம்...................... இந்தியா அகிம்சை முறையில் சுதந்திரம் பெற்ற நாடா.... ஆம் என்பது உங்கள் பதிலாக இருந்தால் அதை திருத்திக்கொள்ளு ங்கள்... பாரதம் அஹிம்சை முறையில் முறையில் போராடி சுதந்திரம் வாங்கியது என்பதை பாட புத்தக்தில் நாம் படித்திருப்பபோம். அதுவும் காந்தி இல்லை என்றால் நமக்கு இன்றளவும் சுதந்திரம் கிடைத்திருக்காது என்று பில்டப் வேறு கொடுக்கப்பட்டிருக்கும். இளைஞர்களே! ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் காந்திய வழியில் போராடி இருந்தால் இன்றைக்கும் நாம் அடிமைதான். பல ஆயிரக்கணக்கான வீரர்களின் உயிரை பலி கொடுத்துதான் நாம் சுதந்திரம் வாங்கினோம். ஆங்கிலேயரை எதிர்த்து பேராடிய இளைஞர்களை பிரிட்டிஷ் அரசு பல விதமான கொடுமைகளுக்கு ஆளாக்கியது. (உதராணத்துக்கு) கைது செய் தவர்களை பீரங்கியின் முன் நிறுத்தி, அதை வெடிக்க வைக்கும் போது உடல் பல துண்டுகளாக சிதறும். இது போன்ற படுபாத செயல்களில் ஈடுபட்டனர். காரணம், இதைப்பார்த்தால் ஆங்கிலேயரை எதிர்த்து போராட வேண்டும் என்ற தோன்றக்கூடாது என்பதற்காக. ஆனால் நம் முன்னோர்களை இதை கண்டு பயந்து விடவில்லை ஆவேசம் அடைந் தார்கள். அவர்களும் துப்பாக்கி ஏந்தி போராடினார்கள். ஆங்கிலேய அதிகாரிகளை தெரு நாயை சுடுவதுபோல் சுட்டு கொன்றனர். வெடி குண்டு வீசி கொலை செய்தனர். ஆனாலும் நாளுக்கு நாள் தாக்குதலில் வேகமும் ஆக்ரோஷமும் கூடியது. மக்கள் வெளிப்படையாக போராட்டத்தில்(அஹிம்சை இல்லை) ஈடுபட ஆரம்பித்தனர். இதைக்கடு மிரண்டு போன ஆங்கிலேயர்கள், பயந்து நடுங்கினர். தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று நாட்டை விட்டு ஓடிவிட்டனர். ஆனால் சத்தியாகிரம், அஹிம்சை இப்படி தான் நமக்கு சுதந்திரம் கிடைத்தது என்று கற்பிக்கப்படுகிறது. சுதந்திரத்துக்காக உண்மையாக போராடியவர்களில் ஒருவரது வரலாறு கூட நமது பாடபுத்தகத்தில் இடம் பெறவில்லை. அரசும் அதைபற்றி கவலைகொள்ளவில்லை. ஆனால் இன்றைய இளைஞர்களாகிய நாம் அதைபற்றி தெரிந்துகொள்ளவேண்டும். மதன்லால் திங்ரா என்ற 21 வயது இந்து இளைஞன் கர்சன் வில்லியம் என்ற ஆங்கிலேய அதிகாரியை லண்டனில் வைத்து நாயை சுடுவது போல் சுட்டு கொன்றான். அதற்காக பிரிட்டிஷ் நீதிமன்றம் அவனுக்கு தூக்கு தண்டனை வழங்கியது. திங்காராவைப் பார்த்து “நீ ஏதாவது கூற விரும்புகிறாயா?” என்று கேட்டபது, அவன் சொன்னான்,தேசபக்தியுள்ள எங்கள் நாட்டுத்தலைவர்களையும் இளைஞர்களையும் நாடு கடத்தியும், தூக்கிலிட்டும் வருகிறிர்கள்..இதற்கு பழி தீர்க்கவே கர்ஸான் வில்லியை சுட்டுக் கொன்றேன்.என்னைக் கைது செய்யவோ, விசாரிக்கவோ, தண்டிக்கவோ, பிரிட்டிஸ் கோர்ட்டுக்கு அதிகாரம் கிடையாது,இதுதான் என் எண்ணம்,அதனால்தான் உங்கள் விசாரணையில் கலந்து கொள்ளவோ, வழக்கறிஞர் உதவி பெற்று வாதாடவோ,இல்லை. எனக்குத் தூக்குத்தண்டனை விதியுங்கள், அதைத்தான் நான் விரும்புகிறேன், ஏனென்றால் என்னை நீங்கள் தூக்கிலிட்டு கொன்றால்தான் , உங்களை பழிவாங்க வேண்டுமென்ற என் தாயகத்து இளைஞர்களின் பழியுணர்வு மேலும் கூர்மையடையும்,!” என்றான் -இதைக்கேட்டு சில நிமிடங்கள் நீதிமன்றமே நிசப்தமாக நின்றது, நீதிபதி பேச வகையின்றி விழித்தார். மதன்லால் திங்காரா தூக்கிலிடுவதற்கு முந்தின நாளன்று பிரிட்டிஸ் அரசாங்க நாளேடான “டெய்லி நியூஸ்” பத்திரிகையில் திங்காராவின் சவால் என்ற அறிக்கை ஒன்று வெளியே வந்தது,அந்த அறிக்கை பிரிட்டிஸ் பேயரசை நிலை குலைய செய்தது, இந்திய விடுதலைப் போர் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வீரகாவியமான அந்த அறிக்கை இதோ, “கர்ஸான் வில்லியை சுட்டுக்கொன்று ஆங்கில மண்ணில் ஆங்கில ரத்தத்தினை சொட்ட வைத்தேன் என்பதினை நான் ஒப்புக்கொள்கிறேன். நான்காண்டுகளுக்கு முன்னர் எங்கள் தங்க வங்கத்தினை இரண்டாக பிரித்த சண்டாளன் கர்ஸான் வில்லி. அவனுக்கு பாடம் புகட்ட இப்போதுதான் தகுந்த வாய்ப்பு கிட்டியது. இந்த முயற்சியில் நான் எவரோடும் கலந்து ஆலோசிக்கவில்லை. ஓர் இந்து என்ற முறையில் என் தேசத்திற்கு இழைக்கப்படும் அவமானம் கடவுளுக்கே இழைக்கப்படும் அவமானமாக நான் கருதுகிறேன். என் தேச காரியம் ஸ்ரீ ராமனின் காரியம். என் தேச சேவை ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிற்கே செய்யும் சேவை ஆகும்.என் தேச சேவை ஸ்ரீகிருஷ்ணபரமாத்மாவிற்கே செய்யும் சேவை. அறிவிலும், செல்வத்திலும் வரியவனான என் போன்ற ஏழை மகன், என் தேசத்தாய்க்கு கொடுக்க என்ன இருக்கிறது,? ஏதும் இல்லாத போது அவளது சந்நிதானத்தில் என் சொந்த ரத்தத்தினையே காணிக்கையாகப் படைப்பதுதானே சிறந்த சமர்ப்பணம்? நானும் அதைத்தான் செய்தேன்.. பாரத மக்களுக்கு இன்று தேவையான ஒரே பாடம் எப்படி சாவது என்று கற்றுக்கொள்வதுதான்! அதனை போதிக்க ஒரே வழி நாமே செத்து மடிவதுதான். இன்றுள்ள ஆண்டான் அடிமை என்ற நிலை ஒழிகின்ற வரை இந்த யுத்தம் தொடரும். யுத்தத்தில் செத்து மடிந்தால் வீரசுவர்க்கம் கிடைக்கும், வென்றால் நமது பூமி திரும்பக் கிடைக்கும்! நான் கடவுளிடம் கெஞ்சிக் கேட்டுக்கொள்ளும் பிரார்த்தனை இதுதான்: நான் மீண்டும் பிறந்தால் என் பாரத அன்னைக்கே மகனாக பிறக்க வேண்டும்: அப்போதும் அவள் அடிமையாக இருந்தால் நான் மீண்டும் இதே புனித காரணத்திற்காகவே போரிட்டு மடிய வேண்டும்.! மனிதகுல நன்மைக்காகவும், ஹிந்துமதம் நிலைத்து நிற்கவும் என் தாயகம் சுதந்திரம் பெற்றே தீரவேண்டும். வந்தேமாதரம்.”” 1909 ஆகஸ்ட் 9 அதிகாலையில் சூரியன் உதயமாகும் முன்பே, மதன்லால் திங்காரா தூக்கிலிடப்பட்டான். எங்கோ பிறந்த அலெக்ஸ்சாண்டர், நெப்போலியன் ஆகியோரின் வரலாற்றினை போதிக்கும் காங்கிரஸ் அரசாங்கம், அபிமன்யுவிற்கு நிகரான மதன்லால் திங்காரா போன்ற மாவீரர்களின் உண்மையான வீரவரலாற்றினை குழி தோண்டி புதைத்து விட்டது, இந்த நாசக்கார காங்கிரஸ் இருக்கும் வரை நாடு நாசமாகத்தான் போகும் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை

No comments:

Post a Comment