மோடிக்கு ஆதரவு : காஷ்மீரில் காங்கிரஸ் உடனான கூட்டணி முடிவுக்கு
வரும் இறுதி கட்டத்தில் இருப்பதால் ஒமர் அப்துல்லா பதவியை ராஜினாமா செய்து,
தேர்தலை தனித்து சந்திக்க தயாராகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது
குறித்து கட்சி தலைவரும், அவரது தந்தையுமான பரூக் அப்துல்லா டிவி
ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ஒமரின் முடிவுபடி நடக்க திட்டமிட்டுள்ளோம்;
அதற்கு முன் நாங்கள் எதையும் முடிவு செய்யப் போவதில்லை; மோடி பிரதமர் ஆவதை
எங்கள் கட்சி எதிர்க்கவில்லை; மோடியின் வெற்றி, தோல்வியை மக்கள் தான்
தீர்மானிக்க வேண்டும்; இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதை மக்கள் தான்
முடிவு செய்ய வேண்டும்; மோடி தான் பிரதமர் ஆக வேண்டும் என மக்கள்
விரும்பினால் அந்த தீர்ப்பை எங்கள் கட்சி ஏற்றுக் கொள்ளும்; காங்கிரசும்-
தேசிய மாநாட்டு கட்சியும் காஷ்மீரின் 3 பகுதிகளில் ஆட்சி செய்து வருகிறது;
வரும் தேர்தலிலும் காங்கிரசிற்கு நாங்கள் சீட் அளித்தால் எங்கள் கட்சி
தனித்தன்மையை இழக்க வேண்டி வரும்; வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின்
ஓட்டுக்கள் எங்களுக்கு கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை;
தனித்து போட்டியிடவே காங்கிரசும் விரும்புகிறது என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment