KALI
PERUNKAYA DAPPAA ......இந்திரா தலைமையேற்ற, காங்கிரஸ் (இ) என்ற கட்சியே,
தற்போது, "காங்கிரஸ்' என்று அழைக்கப்படுகிறது. இதை, "கட்சி' என, கூறுவதை
விட, "காங்கிரஸ் கம்பெனி' என்று சொல்வதே பொருந்தும்.எப்படி, நிறுவனங்களில்
ஆட்கள் தேர்வு செய்யப்படுவரோ, அது போலவே, காங்கிரசிலும், 40 ஆண்டுகளுக்கும்
மே லாக, நிர்வாகிகள் தேர்தல் எதுவும் நடத்தப்படாமல், தலைமைக்கு ஏற்ற
விசுவாசிகளே, பொறுப்புகளில் நியமிக்கப்படுகின்றனர்.உட்கட்சி
ஜனநாயகம் என்பது, அடியோடு மறந்து விட்ட கட்சியில், இது போன்ற நியமனங்கள்,
எந்த அளவிற்கு மக்கள் ஆதரவைப் பெறும் என்பதை, கடந்த காலம் புரிய வைத்தும்,
தற்போது உள்ள தலைவர்கள், அதை உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை.தேர்தல்
வெற்றி என்ற பெருங்காய டப்பாவில், மக்கள் ஆதரவு என்னும் பெருங்காயம், அளவு
குறைய ஆரம்பித்து, பல ஆண்டுகளாகியும், டப்பாவின் வாசனை, இவர்களுக்கு, டப்பா
முழுவதும் பெருங்காயம் இருப்பதாகவே தோன்றுகிறது.
பொதுச் செயலராக
பரிணமிக்க முடியாதவருக்கு, பதவி உயர்வு அளிக்கப்பட்டிருக்கிறது. இதனால்,
காங்கிரஸ் கம்பெனியின் மதிப்பு கூடப் போவதில்லை.
No comments:
Post a Comment