Wednesday, September 25, 2013

மகாபாரதமும் நிஜமே!

ராமரால் கட்டப்பட்ட சேது பாலம் எப்படி 17,50,000 ஆண்டுகளாக இராமேசுவரம் அருகில் உள்ளதோ அதேபோல மகாபாரதத்தில் ஸ்ரீகிருஷ்ணபகவான் வாழ்ந்த அரசாண்ட துவாரகாபுரியும் 5200 ஆண்டுகளாக கடலுக்குள் மூழ்கிக் கிடக்கிறது. கலியுகம் துவங்கி இப்போது 5100 ஆண்டுகளாகின்றன என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இந்திய தேசிய கடல் ஆராய்ச்சிக் கழகம் 1983 முதல் 1990 வரை 18 ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. ஆராய்ச்சிக்குழுவின் தலைவரான எஸ்.ஆர்.ராவ் தனது ஆராய்ச்சி முடிவுகளை ஒருபுத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். அந்தபுத்தகத்தின் பெயர் The Lost City of Dwarka.
புராண அல்லது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பு அகழ்வாராய்ச்சியின் மூலம் வெளிப்பட்டுள்ளது. இது மகாபாரதக்கதை நிஜத்தில் நிகழ்ந்த நிகழ்வு என்பதை துவாரகை இருந்ததையும் உறுதிப்படுத்துகிறது. கி.மு.1500 ஆம் ஆண்டுவாக்கில் தற்போதைய துவாரகை மற்றும் அதன் அருகில் உள்ள பெட் துவாரகை ஆகிய பகுதிகளில் கிருஷ்ணன் வாழ்ந்ததற்கான ஆதாரம் இருக்கிறது.

கடற்கரையிலிருந்து சுமார் அரை மைல் தூரம் நன்கு வடிவமைக்கப்பட்ட ஒரு நகரம் இருந்திருக்கிறது. ஒவ்வொன்றும் 18 மீட்டர் அகலமுள்ள இரண்டு பிரதான சாலைகள், ஒன்றுக்கொன்ரு தொடர்புடைய ஆறு குடியிருப்புகள், மூன்று பிரம்மாண்டமான கட்டடத் தொகுப்புகளைக் கொண்டு துவாரகை விளங்கியிருக்கிறது.

அந்நகரின் சுவர் கல் 3600 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மைவாய்ந்ததாக இருக்கின்றன. கடலில் மூழ்கிய இந்நகரம், வடக்கு நோக்கி விரிவடைந்திருக்கிறது.இப்படி விரிவாக்கமான பகுதி ‘பெட் துவாரகை’ என்றழைக்கப்படுகிறது. இந்த தீவுப்பகுதி கிருஷ்ணர் மற்றும் அவர் மனைவியரான சத்யபாமா மற்றும் ஜாம்பவதிக்கான பொழுதுபோக்குதலமாகவும் அமைந்திருக்கிறது. மேலும் தென்னிந்தியாவின் ஒகமதி என்ற இடம் வரையிலும், கிழக்கு இந்தியாவில் பிந்தாரா பகுதியில் ‘பிந்த்ரா-தாரகா’ என்ற இடத்தில் துர்வாசரின் குடில் இருந்ததாக மகாபாரதத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளது.

துவாரகையின் நிர்மாணம் பிரமிப்பூட்டக்கூடியது.மேற்குக் கடலிலிருந்து நிலம் பெறப்பட்டு நகரம் திட்டமிடுக் கட்டப்பட்டுள்ளது. இது கோமதி நதிக்கரையில் அமைந்துள்ளது. த்வாரமதி, குசஸ்தலை என்றும் துவாரகை அழைக்கப்படது. எல்லா அடிப்படை வசதிகளும் நிறைந்த ஆறு பகுதிகள், குடியிருப்புகள், வியாபார ஸ்தலங்கள், அகன்ற சாலைகள், பொது இடங்கள், ‘சுதர்மா சபா’ என்ற பொதுக்கூட்ட அரங்கம் மற்றும் அழகான துறைமுகம் ஆகியவற்றைக்கொண்டு விளங்கியது துவாரகை.

மகாபாரதயுத்தம் முடிந்து 36 ஆண்டுகள் கழித்து துவாரகையைக் கடல் கொண்டது.இதை முன்கூட்டியே அறிந்த கிருஷ்ணர், யாதவர்களை ப்ரபாஸ் என்ற உயரமான மலைப்பிரதேசத்திற்கு (தற்போதைய சோம்நாத்) அழைத்துச் சென்று காத்தார்.
இந்த துவாரகையை நீர்மூழ்கிக்கப்பல் மூலமாக எல்லோரும் சென்று பார்ப்பதற்கு இந்திய கடல் அகழ்வாராய்ச்சிக் கழகம் ஏற்பாடுகள் செய்து வருகிறது.

நன்றி: ஆன்மீகப்பலன் மாத இதழ் செப்டம்பர் 2007 பக்கம் 4முதல் 7 வரை.
ராமாயணமும் உண்மை. மகாபாரதமும் உண்மை.
போபாலில் இன்று மோடி பிரசாரம்
சற்று நேரத்தில் ஏழு லட்சம் மக்கள் கூடப்போகும் மிக பிரமாண்ட கூட்டத்தில் திரு அத்வானி அவர்களும் மோடி அவர்களும் பேச இருக்கிறார்கள்.
மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவான் உட்பட பா ஜ க வின் அனைத்து தலைவர்களும் கலந்துக் கொள்கிறார்கள்...
vallavar nattai ala nallavargal valavendum

Monday, September 23, 2013

                         ராகுல். அவருக்கு, மக்களாகிய நாம் தான், "பாடம்' புகட்ட வேண்டும்.                                                                                                                                                          சமீபத்தில், ராணுவத்தினர் பலர் அடங்கிய கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, பாகிஸ்தானை எச்சரித்ததும் அல்லாமல், "போதும் உங்கள், 66 ஆண்டு கால இந்தியாவினுடனான யுத்தம். இந்தியாவுடன் மோதாமல், உங்கள் நாட்டு கோடானு கோடி ஏழை மக்கள் வாழவேண்டும் என்று பாடுபடுங்கள். இந்தியாவிடம் பயங்கரவாதத்தை காட்டாமல், உங்கள் நாட்டு மக்களை நல்வழிக்கு கொண்டுவர பாடுபடுங்கள்' என்று பேசினார். தன் நாட்டு மக்கள் மட்டுமின்றி, பாகிஸ்தானின் ஏழைகளும் வாழ வேண்டுமென்று பேசிய மோடி எங்கே? தாயின் உணவுப் பாதுகாப்பு சட்டத்தைக் காட்டி, ராகுல் பேசிய பேச்சு எங்கே? மக்களை வாழ வைப்பதை விடுத்து, முட்டாளாக்கி ஓட்டு வாங்கப் பார்க்கிறார் ராகுல். அவருக்கு, மக்களாகிய நாம் தான், "பாடம்' புகட்ட வேண்டும்.
                 முதலைக் கண்ணீரே தவிர, ரத்தக் கண்ணீர்   அல்ல.                                                                                                                                                                                                                                                                                                                                               ராஜஸ்தான் மாநிலத்தில், ஒரு விழாவில் பேசிய ராகுல், ஏழைகளுக்காக ரத்தக் கண்ணீர் (?) வடித்திருக்கிறார்.
ஏழைகள் வசதியாக வாழ வேண்டும் என்று காங்கிரசும், பணக் காரர்கள் வசதியாக வாழ வேண்டும் என்று, பா.ஜ.,வும் நினைக் கின்றனவாம். பாவம், பெரிய கூட்டத்தை பார்த்தவுடன், என்ன பேசுவது என்று தெரியாமல் பேசியிருக்கிறார் ராகுல். "ஆண்டவன், ஏழைகளுக்கு, ரொட்டி வடிவில் வர வேண்டும்' என்று, 1947ல், காந்திஜி பேசினார். விடுதலை பெற்று, 66 ஆண்டுகளில், 55 ஆண்டுகள் நாட்டை ஆண்டது, காங்கிரஸ் கட்சி தான். ஆனால், ஏழைகளுக்கு உணவளிக்க, இப்போது தான் தோன்றியுள்ளது, இவர்களுக்கு. இவருடைய கொள்ளுத் தாத்தாவான நேருவிடம், இந்தியா, உணவு உற்பத்தியில் உயர்ந்து, உலகிற்கே சோறு போடக் கூடிய நிலையில் இருக்க வேண்டுமென்று தான், 500 கோடி ரூபாயில், கங்கை - காவிரி இணைப்பு திட்டம் கொடுக்கப்பட்டது. ஆனால், அதை, நேரு, குப்பைக் கூடையில் போட்டு, இந்தியா நிமிர்ந்து வாழ வேண்டுமென்றால், கனரக தொழில்கள் வளர வேண்டும் என்று சொல்லி, டாடா, பிர்லா போன்றவர்களை ஊக்குவித்தார். இதன் பலனே, தற்போது, ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது. இவருடைய கொள்ளு தாத்தா செய்த கொடுமையின் பலனை, இன்று அனுபவிக்கிறோம். ஏன் ராகுலிடமே, சில மாதங்களுக்கு முன், "குறைந்த பட்சம், தென்னக நதிகளையாவது இணைத்து, நீரின்றி தவிக்கும் விவசாயிகளை காப்பாற்றுங்களேன்' என்று கேட்டதற்கு, "அதெல்லாம் சரிப்பட்டு வராது' என்று சொன்னார். ஆனால், இப்போது, தேர்தல் நெருங்கும் வேளையில், ஏழைகள் வாழ
வேண்டும் என்று, பேசியிருப்பது, முதலைக் கண்ணீரே தவிர, ரத்தக் கண்ணீர் அல்ல.

Friday, September 20, 2013


Venue
: Trichy - G Corner
Date
: 26th Sep, 2013
Time
: 3.00 PM
Registration ID : ITM1178

Admit One

Name : sakkudisrinivasan
Gender : male
Age : 42
Email ID : sakkudisrinivasan@gmail.com
Mobile No : 9655925277
Assembly Constituency : Madurai East
Are you bringing any Children along with you ?
 

Please pay a delegate fee of Rs. 10/- at the entry gate !

Thursday, September 19, 2013

                                         மோடிஜிக்கு பெருமை சேர்த்த மலேசியத்தமிழர்கள்                கோலாலும்பூர் லிட்டில் இந்தியா என்று அழைக்கப்படும் பிரிக்பில்ட்ஸ் என்ற இடத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சத்திய சாய் இயக்கத்தில், நேற்று மலேசியா தமிழர்கள் சிலர் ஒன்று கூடி கேக் வெட்டி, சிறப்பு வழிபாடு செய்துள்ளார்கள். சிறப்பு வழிபாடு குஜராத் முதல்வர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களுக்கு. அவரின் பிறந்தநாளுக்காக இங்கு கேக் வெட்டி, சிறப்பு பூஜைகள் வழிபாடு செய்து செய்துள்ளனர் மலேசியா தமிழர்கள்.
எனக்கு இதில் என்ன ஆச்சரியம் என்றால், இந்திய அரசியல் தலைவர்களுக்கு பிறந்த நாள் நினைவு நாள் சிறப்பு பூஜைகள் மலேசியா தமிழர்கள் கோவில்களில் செய்துள்ளனர் என்றால்.. அது மறைந்த தமிழக முதல்வர் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் அவர்களுக்கு மட்டும்தான்.. வேறு எவருக்கும் இல்லை.
அவராவது தமிழக முன்னாள் முதல்வர். அதனால், இங்குள்ள தமிழர்கள் அவரை கொண்டாடலாம். ஆனால், தமிழர்கள், அதுவும் மலேசியா தமிழர்கள், தமிழர் அல்லாத ஒரு இந்திய அரசியல் தலைவருக்கு அவர் பிறந்த நாளின் போது, சிறப்பு பூஜைகள் செய்து, அவர் இந்திய பிரதமாராக ஆக வேண்டும். நோய் நொடியின்றி வெகுநாள் வாழவேண்டும் என்று இறைவனிடம் வேண்டி கொண்டார்களே அதுதான் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது..
திராவிட சாக்கடை அரசியலில் மயங்கி, மலேசியா தமிழர்களும், எங்கள் மொழி , எங்கள் இனம், திராவிடம், வடநாடு தென்னாடு, சமஸ்கிருதம் என்று ஏதோதோ உளறி கொண்டு இருந்துள்ளனர்.. ஆனால், இப்போது, அந்த வெறி சிந்தனைகள் மாறி வருகிறது... பாரதம் முழுவதும் நமக்கு சொந்தமே. வட நாடோ, தென்னாடோ, அனைத்தும் அனைத்து இந்திய சகோதர்களும் நம் உறவே என்ற நல்ல சிந்தனை வந்துள்ளது..

Monday, September 16, 2013

வாங்கய்யா வாங்க .. ஒத்தயா வந்தாலும் சரி ஒட்டு மொத்தமா வந்தாலும் சரி இனிமே ஒரு கை பாத்துடலாம் ..!
நாட்டை காக்க நாயகன் வந்துவிட்டான் ,அதுதான் மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்கின்ற ப ஜ க வின் அதிரடி அறிவிப்பு
மோடி வேட்ப்பாளராக அறிவிக்க பட்டதால் அமெரிக்கா அதிர்ந்திருக்கும் , மூக்கில் விரல் வைத்திருக்கும் சீனா , காங்கிரஸ் களவாணிகளுக்கு மாரடைப்பு வந்திருக்கும் , கம்யூனிஸ்ட் எலும்பு பொறுக்கிகள் வயிற்று பிழைப்புக்கு அலையை வேண்டியிருக்கும் , ஆடையோடு முச்சா போயிருப்பார் முலாயம் , மாயாவதிக்கு உடம்பெல்லாம் சொறி எடுத்திருக்கும் , பீகார் கவுண்டமணி குமாருக்கு வயிறு பத்திகிட்டு எரிந்திருக்கும் , கருணாநிதி குடும்பத்திற்கு திகார் சிறையின் வாசம் வந்திருக்கும் .
மக்கள் நலம் விரும்பிகள் ,நடுத்தர ஏழைகள் , தேச பக்தர்கள் எல்லை இல்லாத சந்தோசத்தின் உச்சத்தில் இருப்பார்கள் . வருகின்ற பாரதத்தை வாசனை மலர்கள் தூவி வரவேற்க காத்திருக்கிறார் மோடி. நாளைய பிரதமர் அவர்தான் என்பதை நாடே உள்வாங்கி விட்டது .
அடுத்தடுத்த காய்நகர்த்தல்களில் ப ஜ க வுடன் கூட்டணி வைக்க பல புல்லுருவிகள் ஓடி வருவார்கள் . மோடி மீது அவதூறை அள்ளி வீசிய போலி முற்போக்கு வியாதிகள் இனிமேல் எப்படி தூங்குவார்கள் ? இஸ்லாமிய மதவெறியர்கள் இனிமேல் உறங்குவார்களா ?
வாருங்கள் தேச துரோகிகளே , போலி மதசார்பின்மை வாதிகளே , தமிழின துரோகிகளே , வயிற்று பிழைப்புக்காக ,குடும்ப நலனுக்காக வஞ்சக அரசியல் செய்யும் குள்ள நரிகளே ஒத்தையாக வந்தாலும் சரி ,ஒட்டு மொத்தமாக வந்தாலும் சரி எங்கள் தர்ம தலைவனோடு ( மோடியோடு ) நாங்கள் இருக்கிறோம் .வாருங்கள் மோதி பார்த்துவிடலாம்

நன்றி ;ஆர்த்தி