Saturday, August 31, 2013

       கெஞ்சினால் மிஞ்சுவர்; மிஞ்சினால் கெஞ்சுவர்"பாகிஸ்தான் - இந்தியா எல்லையில் நடக்கும் சண்டை சச்சரவுகளை, அமைதியான முறையில் பேசி, தீர்வு காண வேண்டும். ஒரு போதும், வன்முறை தீர்வாகாது' என்பது, இந்தியாவின் நிலைப்பாடு. ஆனால், பேச்சு மூலம், இரு நாட்டு உறவுகள் பலப்படவில்லை. நாம் மட்டும் அமைதியாய் இருப்பதால் தான், பாக்., ராணுவம் அத்துமீறி, இந்திய நிலைகள் மீதும், இந்திய ராணுவ வீரர்கள் மீதும், தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. வன்முறைக்கு வன்முறை தான் தீர்வு.
உலகிலேயே, மக்கள் தொகையில், இரண்டாவது மிகப் பெரிய நாடு; சீனாவுக்கு அடுத்தபடியாக மிகப் பெரிய ராணுவம்; மக்கள் தொகையில், 70 சதவீதம் இளைஞர்கள் என, இருக்கும் நாம் ஏன், பாக்., நம் மீது நடத்தும் தாக்குதலை, பொறுத்துக் கொள்ள வேண்டும்; அநியாயமாக, இந்திய வீரர்களை இழக்க வேண்டும்? அத்துமீறி தாக்குதல் தொடுக்கும் பாக்., மீது, நாம், அதிரடியாய் தாக்குதல் நடத்தி, அந்த தாக்குதலை பாக்., ராணுவம் எதிர்கொள்ள முடியாமல், பாக்., ராணுவமே நம்மை பேச்சுக்கு அழைத்தால் தான், அது உண்மையான பேச்சாக அமையும். அதுவரை, பாக்., நம்மை சீண்டியபடியே இருக்கும். கெஞ்சினால் மிஞ்சுவர்; மிஞ்சினால் கெஞ்சுவர். இது தான் உலக இயல்பு! பொறுத்தது போதும். இந்திய ராணுவமே பொங்கி எழு; எதிரிகள் புறமுதுகிட்டு ஓடட்டும்.
                                              
                                 நாடு பாதாளம் நோக்கி செல்கிறது
இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள சரிவு, கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றால் ரூ.1,80,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, பிரதமருக்கு எழுதி உள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். விரைவில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மானிய விலை எரிபொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய அபாயம் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Friday, August 30, 2013

பிரதமரின் கண்காணிப்பில் இருந்த துறையில் ஊழல் நடந்துள்ளதாகச் சொல்லப்படுவதும், அது சம்பந்தப்பட்ட, 257 கோப்புகள், ஒட்டு மொத்தமாக காணாமல் போய்விட்டதாக சொல்லப்படுவதும், எந்த அளவிற்கு, தவறு நடந்துள்ளது என்பதை, படம் பிடித்துக் காட்டி விட்டது. பிரதமர் நேர்மையானவராக இருந்தால், உடனடியாக, பதவியை, ராஜினாமா செய்ய வேண்டும். கடந்த ஒன்பதரை ஆண்டு ஆட்சி காலங்களில், வரலாறு காணாத ஊழல்களை செய்து விட்டு, இப்படிப்பட்ட சூழ்நிலையிலும், பதவியை விட்டு விடாமல், ஒட்டிக் கொண்டிருப்பது, நிச்சயம், மன்மோகனுக்கு பெருமை சேர்க்காது. அன்று, ஆதர்ஷ் ஊழலில் முக்கிய கோப்புகள், கடலில் தூக்கி வீசப்பட்டதும், எரிக்கப்பட்டதும் அனைவரும் அறிந்ததே. எனவே, அதை விட பெரிய ஊழலான, நிலக்கரி ஊழலில் சம்பந்தப்பட்டவர்கள், நாட்டின் உயர் பதவிகளில் இருப்பதால், நிச்சயம், இந்த, 257 கோப்பு களும் எரிந்து, சாம்பல் ஆக்கப்பட்டிருக்கும் என்பதில், மாற்றுக் கருத்து கிடையாது.
           நாட்டின் பொருளாதார மந்தநிலை குறித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை பா.ஜ., உறுப்பினர்கள் சந்தித்து பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி ; 2013ம் ஆண்டிலேயே லோக்சபா தேர்தல் நடத்த வேண்டும் எனவும், அனைத்து விவகாரங்களுக்கும் மத்திய அரசே காரணம் . மாநில சட்டசபை தேர்தலுடன் லோக்சபா தேர்தலும் நடத்த வேண்டும்; எதிர்க்கட்சிகள் மற்றும் வெளிநாட்டு காரணிகள் மீது பழி போடும் விளையாட்டை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிறுத்த வேண்டும். இவ்வாறு அத்வானி தெரிவித்துள்ளார்.
பிரதமர் உரைக்கு பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி மத்திய அரசு மீது கடும் குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளார். அவையில் அவர் பேசியதாவது : உலக நாடுகளை அமெரிக்க எச்சரித்த போது அதனை மத்திய அரசு புறக்கணித்துள்ளது; நாட்டில் நடக்கும் ஊழல்களை பொருளாதார மந்தநிலைக்கு காரணம்; பிரதமரின் பேச்சு நம்பிக்கை அளிக்கவில்லை; அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது; அரசின் தவறான கொள்கைகளால் முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tuesday, August 27, 2013

அந்தமான் நிக்கோபார் தீவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அந்தமான் நிக்கோபார் தீவுகள்
Skyline of
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் இருப்பிடம்
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் இருப்பிடம்
அமைவு: 11.68,
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
நிறுவப்பட்டது 1956-11-01
தலைநகர் போர்ட் பிளேர்
மாவட்டங்கள் 3
பரப்பளவு
 - நகரம் 8,250 கிமீ²  (3,185.3 ச. மைல்)
மக்கள் தொகை (2011)[1]
 - நகரம் 379
 - அடர்த்தி /கிமீ² (./ச. மைல்)
HDI Green Arrow Up Darker.svg0.778 (உயர்வு)
Official languages ஹிந்தி, ஆங்கிலம்[2]
இணையத்தளம்: www.and.nic.in
அந்தமான் நிக்கோபார் தீவுகள், போர்ட் பிளேரைச் சுற்றியுள்ள பகுதி பெரிதாகக் காட்டப்பட்டுள்ளது.
அந்தமான் நிகோபார் தீவுகள் இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்றாகும். இத்தீவுகள் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ளன. இது இரண்டு தீவுக் கூட்டங்களைக் கொண்டது. அவை அந்தமான் தீவுகள் மற்றும் நிகோபார் தீவுகள் ஆகும். இவை அந்தமான் கடலையும் இந்தியப் பெருங்கடலையும் இணைக்கின்றன. இப்பிரதேசத்தின் தலைநகரம் போர்ட் பிளேர் என்னும் அந்தமானில் உள்ள நகரம் ஆகும்.
அந்தமான் நிகோபார் தீவுகளின் மொத்தம் எண்ணிக்கை 572. இதில் மக்கள் குடியிருக்கும் தீவுகளின் எண்ணிக்கை 36 ஆகும். இத் தீவுக்கூட்டங்களைக் கொண்ட இந்தத் தொகுதி ஒரு முனையில் இருந்து மறு முனைவரை 700 கி.மீட்டருக்கும் அதிகமான தொலைவு கொண்டது. அந்தமான் நிகோபாரின் தலைநகரான போர்ட் பிளேயரில் இருந்து கப்பல் மூலம் பொருட்களை தென் முனைத்தீவுகளுக்குக் கொண்டு சேர்க்க 50 மணி நேரம் வரை பிடிக்கும். இங்குள்ள தீவுகள் அரிய வகை கடல் உயிரினங்கள், தென்னை மரம் சூழ்ந்த கடற்கரைகள், பவளப் பாறைகள், பசுமைக் காடுகள், அருவிகள் போன்றவற்றைக் கொண்டுள்ளன.

மக்கள்

சமயவாரியாக மக்கள் தொகை [3]
சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 356,152 100%
இந்துகள் 246,589 69.24%
இசுலாமியர் 29,265 8.22%
கிறித்தவர் 77,178 21.67%
சீக்கியர் 1,587 0.45%
பௌத்தர் 421 0.12%
சமணர் 23 0.01%
ஏனைய 238 0.07%
குறிப்பிடாதோர் 851 0.24%

மேற்கோள்கள்

  1. Census of India, 2011. Census Data Online, Population.
  2. "Most of Indian languages are spoken in Andaman and Nicobar Islands because of its cosmopolitan nature. The common language is Hindi whereas English and Hindi are used in official correspondence." Andaman District Administration, Profile, retrieved 2007-06-06
  3. Census of india , 2001

வெளி இணைப்புகள்

சமீபகாலமாக, மத்திய அரசு எடுக்கும் சில முடிவுகள், கணக்கீடுகள், புள்ளி விவரங்கள் தவறானவையாக இருக்கின்றன. இவை, பாமர மக்களை ஏமாற்றுவதாக வேண்டுமானால் இருக்கலாம்; கணக்கு தெரிந்தவர்களை ஏமாற்ற முடியாது. மொத்தம், 120 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில், 80 கோடி ஏழை களுக்கு, உணவு உத்தரவாதம் அளிக்க கூடிது தான், உணவு பாதுகாப்பு திட்டம் என்கிறது, மத்திய அரசு. கிட்டத்தட்ட, 3ல், 2 மடங்கு மக்கள், ஏழை
என்கின்றனர்.ஆனால், அதே அரசின், திட்டக் கமிஷன் தரும் புள்ளி விவரமோ, நாள் ஒன்றுக்கு, 32 ரூபாய் செலவழிக்க கூடியவர்கள் ஏழைகள் அல்ல என்கிறது. அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மூலம், நாட்டில், ஏழைகள் எண்ணிக்கை குறைந்து விட்டதாகவும் தம்பட்டம் அடித்துக் கொள்ளப்படுகிறது. இதன்படி பார்த்தால், வெறும், 15 கோடிக்கும் குறைவான மக்களே, இத்திட்டத்தின் கீழ், பயன் பெற முடியும். முன்பு, அரசு சேமிப்பு கிடங்குகளில், வீணாகிக் கிடந்த, பல லட்சம் கோடி டன் உணவு தானியங்களை, நாட்டில் உள்ள, ஏழைகளுக்கு வழங்க, நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்ட போதெல்லாம், காதில் வாங்காமல் இருந்து விட்டு, தற்போது, அசுர கதியில், இத்திட்டத்தை செயல்படுத்த துடிப்பது ஏன்? லோக்சபா தேர்தல் தானே...! அடுத்ததாக, திருவாளர் சிதம்பரத்தின் கணக்கு, இரண்டாம் வகுப்பு மாணவனின் கணக்கை விட, மோசமாக உள்ளது. பெரும் பணக்காரர்களுக்கு, 35 சதவீதம் வரி விதிக்கப் போகிறாராம். அது தான், ஏற்கனவே, ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டக் கூடியவர்களுக்கு, 30 சதவீத வருமான வரியின் அடிப்படையில், கூடுதலாக, 10 சதவீதம் சேர்த்து, ஆக, 33 சதவீதமாகி விட்டதே. இவர் அறிவித்துள்ள புதிய பிரிவு, 10 கோடி வரை 30 சதவீதம்; 10 கோடிக்கு மேல், எவ்வளவு வருமானம் ஈட்டினாலும், 35 சதவீதம் தான். யார் காதில் பூ சுற்றப் பார்க்கிறார்?
இதை நன்கு உற்றுப் பார்த்தால், பெரும் பணக்காரர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள, வரிச் சலுகை என்று தான் கருத முடியும். ஆக, 100 கோடி ரூபாய் சம்பாதிப்பவனுக்கு, 35 சதவீத வரி என்பது, பெரிய விஷயமில்லை. உண்மையிலேயே, பெரும் பணக்காரர்களுக்கு, கூடுதல் வரி விதிக்க நினைத்திருந்தால், 1 கோடி முதல், 10 கோடி வரை, 35 சதவீதமும்; 10 முதல், 50 கோடி வரை, 40 சதவீதமும்; 50 கோடிக்கு மேல் எவ்வளவு வருவாய் ஈட்டினாலும், 50 சதவீதம் வரி விதிக்க துணிந்திருக்க வேண்டும்.
முடியாது... சிதம்பரம் தான், பணக்காரர்களின் தோழனாயிற்றே! அடுத்து, பிரதமர் மன்மோகன் சிங், தன் சிறப்பு பிரதிநிதியாக, அஸ்வனி குமாரை நியமித்துள்ளார். யார் இந்த அஸ்வனி குமார்... நிலக்கரி சுரங்கங்களுக்கு ஊழல் குறித்த, சி.பி.ஐ., விசாரணை அறிக்கையை திருத்திய சர்ச்சையில், உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்திற்குரியவர்.
இதற்காகவே, மூன்று மாதத்திற்கு முன், சட்ட அமைச்சர் பதவியிலிருந்து விலக்கப்பட்டவர். அவர், இன்று, பிரதமரின் சிறப்பு பிரதிநிதி. என்ன கொடுமை இதெல்லாம்... நாடு எங்கே உருப்பட