Tuesday, August 13, 2013

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதி உள்ளார். மே மாதம் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலை கருத்திக் கொண்டு ஓட்டு வங்கியை அதிகரிப்பதற்காக மானிய விலையிலான உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை அரசு கொண்டு வர அவசரம் காட்டுவதாகவும் மோடி தெரிவித்துள்ளார்.

உணவு பாதுகாப்பு மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மோடி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவை தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி கடந்த மாதம் இத்திட்டத்தை அறிமுகம் செய்ய ஒப்புதல் தெரிவித்துள்ளது. ஆனால் பார்லி.,யில் 6 வாரங்களுக்குள் ஒப்புதல் பெற வேண்டும். பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து உணவு பாதுகாப்பு மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் முலாயம் சிங் உள்ளிட்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆதரவு அளித்ததால் பிற கட்சிகளில் ஒப்புதலை பெறாமல் இம்மசோதாவை நிறைவேற்ற அரசு வேகம் காட்டி வருவதாகவும் மோடி தெரிவித்துள்ளார். மசோதா மீது பார்லி‌.,யில் விவாதம் நடத்தி விரைவில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஆனால் கடந்த சில நாட்களாக பார்லி.,யில் தனி தெலுங்கானா அமைக்க வேண்டும் என வலியுறுத்தி சில உறுப்பினர்களும், சமீபத்தில் காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தினரால் இந்திய வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்ட விவகாரம் குறித்த சில உறுப்பினர்களும் குரல் எழுப்பி அவையை முடக்கி வருகின்றனர்.

உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றும் முடிவில் அரசு உறுதியாக இருந்தால் அனைத்து மாநில முதல்வர்களையும் அழைத்து மசோதா குறித்து ஆலோசனை நடத்த வேண்டும் என மோடி குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியாவின் கனவு திட்டமான உணவு பாதுகாப்பு சட்டத்தால் அரசுக்கு ரூ.1.25 லட்சம் கோடி செலவு ஏற்படும். நாடு முழுவதும் சுமார் 800 மில்லியன் மக்களுக்கு ரூ.2க்கு கோதுமையும், ரூ.3 க்கு அரிசியும் மானிய விலையில் வழங்கடுவதே உணவு பாதுகாப்பு சட்டத்தின் நோக்கமாகும்.
நன்கொடையால் ஏற்பட்ட டென்ஷன்...!
ஊழலுக்கு எதிராக, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே, "ஜனதந்திரா' என்ற பெயரில், யாத்திரை நடத்தி வருகிறார். இந்த யாத்திரையின் போது, திடீர் திடீரென, டென்ஷனாகி, அன்னா ஹசாரே கோபப்படுவது, அவரது ஆதரவாளர்களுக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், உ.பி., மாநிலம் வாரணாசிக்கு, அவரின் யாத்திரை சென்றது. அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில், அவர் பேசியபோது, கூட்டத்திலிருந்தவர்களிடம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், ஒரு நோட்டீசை வினியோகித்தனர். அதில், அன்னா ஹசாரேயின் புகைப்படம் அச்சிடப்பட்டிருந்தது. அத்துடன், "ஊழலுக்கு எதிரான யாத்திரைக்கு, உங்களால் முடிந்த அளவு நன்கொடை செலுத்துங்கள்' என்றும் எழுதப்பட்டிருந்தது. இந்த நோட்டீசை வினியோகித்து, வேகம் வேகமாக, பணம் வசூலித்து கொண்டிருந்தனர். அன்னா ஹசாரே, இதைப் பார்த்து விட்டார். கடும் ஆத்திரமடைந்த அவர், "என்னை கேட்காமல், பணம் வசூலிக்க ஐடியா கொடுத்தது யார்? இங்கே இருந்து தான், ஊழல் ஆரம்பிக்கிறது. வசூலித்த பணத்தை எல்லாம், உடனடியாக, திரும்ப கொடுங்கள். இல்லையேல், போலீசில் புகார் கொடுத்து, நடவடிக்கை எடுப்பேன்' என, ஓபன் மைக்கிலேயே, எகிறினார். ஹசாரேயின் கோபத்தை பார்த்த, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், வெல வெலத்து போயினர். "பெருசு தொல்லை தாங்க முடியவில்லையே. நன்கொடை வசூலிக்காமல், எப்படி கூட்டம் நடத்த முடியும். சொந்த காசில் சூனியம் வைப்பதற்கு, எங்களுக்கென்ன தலையெழுத்தா' என, புலம்பியபடியே, கலைந்து சென்றனர்

Monday, August 12, 2013

நம் பாரத தேசத்தை காக்க வந்த சர்தார் வல்லபாய் பட்டேல் நரேந்திர மோதி - காங்கிரஸ் மத்திய அமைச்சர் புகழாரம். தேர்தல் நெருங்கும் நேரத்தில் காங்கிரஸ் என்ற கட்சியே இல்லாமல் போனாலும் ஆச்சிரியம் இல்லை.
http://www.ndtv.com/article/india/now-shivraj-singh-chouhan-says-narendra-modi-can-only-be-compared-to-sardar-patel-404119?pfrom=home-lateststories

Thankful to Hyderabad for the warm welcome. Will now address Nava Bharat Yuva Bheri (Youth Convention). Join LIVE http://nm4.in/16RZnOk
Heartfelt thanks to the incredible & huge audience at LB Stadium in Hyderabad. Their participation displays the mood of the country! Congratulations to AP BJP leaders who organized it & youth who registered to have got involved in Uttarakhand relief work through this rally.

Our country is going through a troubled situation. China intrudes our borders, Pakistan kills our soldiers time & again but Centre doesn’t act! The root of all the problems is Congress lacks seriousness o...See More
Had a memorable day at Hyderabad. Sharing some glimpses of Nava Bharat Yuva Bheri http://nm4.in/14zWbo9
பா.ஜ.க-வில் இணைகிறார் எடியூரப்பா?
பெங்களூரு: கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா பாரதிய ஜனதா கட்சியில் மீண்டும் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. சட்டவிரோத சுரங்க முறைகேடு புகாரால் முதல்வர் பதவியை இழந்த எடியூரப்பா பாரதிய ஜனதாவிலிருந்து பிரிந்து கர்நாடக ஜனதா என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். அவரது விலகலுக்கு பின்னர் சட்டப்பேரவைத் தேர்தலை சந்தித்த பாரதிய ஜனதா படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற, எடியூரப்பாவை மீண்டும் கட்சியில் சேர்ப்பது அவசியம் என அக்கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் எடியூரப்பா பாரதிய ஜனதாவில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நரேந்திர மோடியிடம் எடியூரப்பா தொலைபேசி மூலம் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியுள் ள து