Monday, August 12, 2013

நரேந்திர மோடியின் பேச்சை நேரடியாக கேட்க வேண்டும் என்று ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வயதான பெண்மணி ஒருவர் விரும்பினார், அவர் தன் மகனிடம் தனது விருப்பத்தை தெரிவித்தார். லட்ச கணக்கான கூட்டத்தில் எப்படி தனது தாயாரை அழைத்து செல்வது என்று தயங்கிய அவரது மகன் , நரேந்திர மோடிக்கே நேரடியாக ட்வீட் செய்தார் , அதனை தொடர்ந்து அந்த பெண்மணி அழைத்து வரும் பொறுப்பை ஆந்திர மாநில பாஜக.,விடம் நரேந்திர மோடி வழங்கினார் , மேலும் நரேந்திர மோடியின் மேடை பேச்சை நேரடியாக கேட்க்க வேண்டும் என்று விரும்பியவருக்கு, மேடை ஏறி அவரை தொட்டுப்பார்த்து ஆசி வழங்கும் வாய்ப்பே கிடைத்துவிட்டது

Saturday, August 10, 2013

முத்துப்பேட்டை - அல்லாவின் ரம்ஜான் பரிசு - பாஜகவினர் நடத்திய இலவச ரத்ததான முகாமில் கடைகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய முஸ்லீம் கும்பல், போலீஸ் தடியடி!!
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவான் ஓடையில் பா.ஜனதா கட்சியின் மாநில செயலாளர் கருப்பு என்கிற முருகானந்தம் வசித்து வருகிறார். நேற்று அவருடைய பிறந்தநாளை முத்துப்பேட்டை குமரன் கடைத்தெருவில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கொண்டாட பா.ஜனதா கட்சியினர் முடிவு செய்தனர்.
இதையொட்டி நேற்று ஜாம்புவான் ஓடையில் இருந்து மாநில செயலாளர் கருப்பு என்கிற முருகானந்தத்தை அழைத்து கொண்டு பா.ஜனதா கட்சியினர் ஊர்வலமாக விழா நடக்கும் மண்டபத்திற்குச் சென்றனர்.
கல்வீச்சு – போலீஸ் தடியடி
ஊர்வலத்தின்போது முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கட்சியினர் பட்டாசு வெடித்தனர். பா.ஜனதா கட்சியினர் விழா மண்டபத்திற்குச் சென்ற சிறிது நேரத்தில் 50 பேர் கொண்ட கும்பல் பா.ஜனதா கட்சியினர் விழா நடத்தி கொண்டிருந்த மண்டபத்தை நோக்கிச் சென்றது. அந்த கும்பலைச்சேர்ந்தவர்கள் முத்துப்பேட்டை பழைய பஸ் நிலையம் அருகே பட்டாசு வெடித்து, கல் வீசி தாக்குதல் நடத்தினர்.
அப்போது அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடியடி நடத்தி கும்பலை மண்டபத்திற்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும் 50–க்கும் மேற்பட்ட போலீசார் பழைய பஸ் நிலையம், குமரன் கடைத்தெரு, ஆசாத்நகர் உள்ளிட்ட இடங்களில் குவிக்கப்பட்டு முத்துப்பேட்டையைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
கடைகள் அடைப்பு
இந்த நிலையில் கடைகள் மீது கும்பல் ஒன்று கல் வீசி தாக்குதல் நடத்தியதை கண்டித்து அப்பகுதி கடைகாரர்கள் தங்கள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு காளிராஜ்மகேஷ்குமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சூப்பிரண்டு, வர்த்தக சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, கடைகளை திறக்குமாறு கூறினார். அப்போது வர்த்தக சங்கத்தினர் முத்துப்பேட்டை பகுதிகளில் கடைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதைதொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டார். இதன்பேரில் போலீஸ் பாதுகாப்புடன் முத்துப்பேட்டை பகுதி கடைகள் உடனடியாக திறக்கப்பட்டன.
போலீஸ் விசாரணை
முன்னதாக பழைய பஸ் நிலையம் அருகே கும்பல் நடத்திய கல்வீச்சு சம்பவத்தின்போது குணசேகரன், பாஸ்கரன், சாகுல்அமீது, சரவணன் ஆகிய 4 பேரின் கடைகள் சேதம் அடைந்தன. இதுகுறித்து சேதப்படுத்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் 4 பேரும் முத்துப்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கும்பல் ஒன்று திடீரென கடைகள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தியதற்கான காரணம் என்ன? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Friday, August 9, 2013

வாழ்க பண நாயகம்!"100 கோடி ரூபாய் இருந்தால் போதும்; ராஜ்யசபா எம்.பி, ஆகிடலாம்; பேரம் பேசி, 80கோடி ரூபாய் கொடுத்து தான் நான், எம்.பி., ஆனேன்; 20 கோடி ரூபாய் மிச்சம் பிடித்துள்ளேன்' என்று கூறியுள்ளார், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., பீரேந்திர சிங்.
அதோடு, "இந்த உண்மையை, வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டியதில், எனக்குப் பயமே இல்லை. கட்சியின் நடவடிக்கைக்கு, பயப்படப் போவதும் இல்லை. பெரும்பாலான எம்.பி.,க்களின் மனக்குமுறலைத் தான், நான் வெளிப்படுத்தி இருக்கிறேன்' என்று, மனம் திறந்து சொல்லியிருக்கிறார். இவர், துணிந்து, இப்படி வெளிப்படையாகப் பேசியதை, நாம் பாராட்டி யே ஆக வேண்டும். "ராஜ்யசபா எம்.பி., யாக, 100 கோடி; லோக்சபா எம்.பி.,யாக, 200 கோடி; பிரதமராக, 500 கோடி; துணை ஜனாதிபதியாக, 1,000 கோடி; ஜனாதிபதியாக, 2,000 கோடி' என, இப்படியொரு, "லிஸ்டை' பார்லிமென்டில் விளம்பரம் செய்து விட்டால் போதும்; அரசுக்கு கணிசமான வருமானம் வரும். அம்பானி சகோதரர் களுக்கு, இந்த தொகையெல்லாம் வெறும் ஜுஜுபி தான். கோடீஸ்வரர்களான டாடா, பிர்லா குடும்பத்தில், வேலைக்காரர்கள் கூட பணம் கொடுத்து எம்.பி., அமைச்சர் ஆகி விடலாம். சும்மா சொல்லக் கூடாது, நம்ம ஜனநாயக வியாபாரம், இன்று, கோடிக்கணக்கில் நடப்பதைப் பார்த்து, ஒவ்வொரு இந்தியனும், நிச்சயம் "பெருமைப்'பட வேண்டும். மகாத்மா காந்தி இன்று இருந்திருந்தால், அவர் எம்.பி., ஆக முடியாது. ராஜாஜி, படேல், வ.உ.சிதம்பரம் பிள்ளை போன்றோர், அரசியலுக்கு வந்திருக்க முடியாது.
"பாருக்குள்ளே நல்ல நாடு; எங்கள் பாரத நாடு' என்று பாடிய பாரதியார், இந்த ஜனநாயக வியாபாரத்தைப் கண்டால், மனம் நொந்து, "நூடுல்ஸ்' ஆகியிருப்பார்.
தனலட்சுமியின் கருணை இல்லாதவர்கள் அரசியலுக்கு வரவே முடியாது. "பணம் பார்லிமென்ட்டிலே; குணம் கூவம் நதிக்கரையிலே' என்று பாடி, மனம் நொந்திருப்பார் கவியரசு கண்ணதாசன். வாழ்க பண நாயகம்!
குஜராத் தொழில்துறை முதலீட்டிலும் முதலிடத்தை பிடித்து, முன்னேடியாக திகழ்கிறது. 2013ம் ஆண்டு மே மாதம் வரை இந்தியா முழுவதும் ரூ.219,628 கோடி அளவிற்கு தொழிற்துறை முதலீட்டு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இவற்றில் மே மாத இறுதி வரை 1149 பணிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளதாக வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் புள்ளி விபர அறிக்கை தெரிவித்துள்ளது.

இதுவரை நிறைவுபெற்றுள்ள மொத்த தொழில்துறை திட்டங்களில் 25 சதவீதம் குஜராத்தில் நடைபெற்றுள்ளது. அதே சமயம் 18க்கும் மேற்பட்ட மாநிலங்கள் வெறும் 1 சதவீதம் தொழில்துறை திட்டங்களை நிறைவு செய்துள்ளன. இத்தகைய மாநிலங்களில் மிகக் குறைந்த அள‌வே தொழில்துறை வளர்ச்சி பெற்றுள்ளன. நாட்டின் வர்த்தக தலைநகரைக் கொண்டுள்ள மகாராஷ்டிரா,தொழில்துறை முதலீட்டு திட்டங்களை நிறைவேற்றிய 2வது மாநிலமாக திகழ்கிறது. நடப்பு ஆண்டில் குஜராத்துடன் ஒப்பிடுகையில் வட கிழக்கு மாநிலமான நாகாலாந்து, பூஜ்ஜிய அளவிலான முதலீட்டு திட்டங்களை பெற்றுள்ளது. மற்ற வட கிழக்கு மாநிலங்கள் சொற்ப அளவிலான முதலீடுகளையே கொண்டுள்ளன. மிசோரம் 0.01 சதவீதமும், மேகாலயா 0.04 சதவீதமும், மணிப்பூர் 0.01 சதவீதமும், சிக்கிம் 0.05 சதவீதமும், அருணாச்சல பிரதேசம் 0.16 சதவீதமும், அசாம் 0.52 சதவீதமும், திரிபுரா 0.02 சதவீதமும் முதலீடுகளை செய்துள்ளன. சட்டீஸ்கர் மாநிலம் 13.39 சதவீதம் தொழில்துறை முதலீடுகளை மேற்கொண்டு கிழக்கிந்திய மாநிலங்களில் 3வது இடத்தில் உள்ளதாகவும் தொழில்துறை அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, முதலீடுகள் செய்ய சிறந்த இடம் மேற்வங்கம் என சமீபத்தில் தெரிவித்துள்ளார். ஆனால் மேற்குவங்க வங்கத்தில் தொழில்துறை முதலீட்டின் எதிர்காலம் என்பது கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இருண்ட நிலையிலேயே உள்ளன. இம்மாநிலத்தில் 2005 ம் ஆண்ட 5 சதவீதத்திற்கும் அதிகமான முதலீட்டு திட்டங்கள் நடைபெற்றுள்ளன. அதன் பின் மேற்குவங்கத்தில் தொழில்துறை முதலீடு படிப்படியாக சரிவையே சந்தித்து வந்துள்ளது. 2013ம் ஆண்டு மே மாதம் வரை மேற்குவங்கத்தில் 1.35 சதவீதம் மட்டுமே ‌தொழில்துறை முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒடிசாவில் 2012ம் ஆண்டு 11.20 சதவீதமாக இருந்த முதலீட்டு அளவு நடப்பு ஆண்டின் மே மாதம் வரை 3.19 சதவீதம் என்ற அளவையே எட்டி உள்ளது. பீகாரை பொருத்த வரை மற்ற துறைகளில் வளர்ச்சி ஏற்பட்டிருந்தாலும் தொழில்துறை வளர்ச்சி என்பது பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. இம்மாநிலத்தில் 0.45 சதவீதம் என்ற அளவிலேயே தொழில்துறை முதலீடு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஜார்கண்ட் மாநிலம் 1.87 சதவீதம் முதலீடுகளை பெற்றுள்ளது.

2012ம் ஆண்டில் இந்தியாவில் ரூ.567,868 கோடி மதிப்பிலான முதலீடுகள் தொழில்துறை திட்டங்களில் செய்யப்பட்டன. கடந்த ஆண்டும் குஜராத், சட்டீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்ளே தொழில்துறை முதலீட்டில் முதல் 3 இடங்களை பிடித்துள்ளன

Thursday, August 8, 2013

தமிழகத்தில், 1967ல் நடைபெற்ற லோக்சபா தேர்தலில், எப்படி காங்கிரஸ் முற்றிலுமாக அகற்றப்பட்டதோ, அதே போன்ற ஒரு நிலை, காங்கிரசுக்கு எதிர்ப்பலை, இப்போது, நாடு முழுவதும் தோன்றியிருக்கிறது. மோடி பிரதமராக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, 65 சதவீதத்திற்கு மேலான இந்திய மக்களிடம் மேலோங்கி இருக்கிறது. இந்த நிலையை, பா.ஜ., உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். நாடே எதிர்பார்க்கும், ஒரு பிரதம வேட்பாளரை, பா.ஜ.,வினர் சிலரே எதிர்ப்பது
வேதனையானது. அத்வானி போட்டியிடப் போகிறாரா என்று தெரியவில்லை. பா.ஜ., தேர்தல் பிரசாரத்தை துவக்கி விட்டது. ஆனால், பேசிய, ஒரு சில கூட்டங்களில் அத்வானி, "மோடியே பிரதமர்' என்றோ, "அவரை ஆதரித்து பா.ஜ.,வை வெற்றி பெறச் செய்யுங்கள்' என்றோ, ஒரு கூட்டத்திலும் பேசவில்லை. காங்கிரசில் அப்படியில்லை. சோனியாவோ, ராகுலோ, பிரியங்காவோ, யாராக இருந்தாலும், பிரதமராக காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளும். அடிமைத் தளையிலிருந்து நாட்டை மீட்ட காங்கிரஸ், இன்று, நேரு குடும்பத்துக்கு
அடிமையாக உள்ளது. சோனியா, "ராபர்ட் வதேரா தான் பிரதமர்' என்று கூறினாலும், அதை மற்ற காங்கிரஸ் தலைவர்கள், எந்த விதமான எதிர்ப்பும் தெரிவிக்காமல், ஏற்றுக் கொள்வர்.
ஆனால், பா.ஜ.,வில் இப்படியில்லை; அதன் உட்கட்சி ஜனநாயகம் நன்றாக உள்ளது ,பாஜ   தான் ,நாட்டை காப்பாற்றவேண்டும்
Click Here

Wednesday, August 7, 2013

சேது சமுத்திர கால்வாய் திட்டம், மறுபடியும் பரபரப்பைக் கிளப்பி உள்ளது. ஈழத் தமிழர்கள் பேரைச் சொல்லி, தி.மு.க., விட்ட, நேரம் கடந்த போலிக் கண்ணீருக்கு, மதிப்பில்லாமல் போய் விட்டது. நைந்து, கிழிந்து போன, "டெசோ'வுக்கு, ஒட்டு வைத்து தைத்து, அரிதாரம் பூசி, அலங்காரம் செய்து, அரியணை ஏற்றி, ஆரவாரம் செய்தும் எடுபடவில்லை. கச்சத்தீவை மீட்பதற்காக, முதல் குரல் எழுப்பியதிலிருந்து, ஹிரோஷிமா, நாகசாகியில் வீசப்பட்ட முதல் அணுகுண்டுகளை கண்டு பிடித்தது வரை, எல்லாவற்றுக்கும் உரிமை கொண்டாடிப் பார்த்தால், அதை நம்புவதற்கு, எவரையும் காணவில்லை. சரி... இதெல்லாம் போகட்டும்... மாநில அரசுக்கு எதிராக, அறிக்கைகள் விடலாம் என்று முயற்சித்தால், நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல், சுடச் சுடக் கிடைக்கிறது பதிலடி. என்ன தான் செய்வது? என்ன தான் செய்ய என்று, கருணாநிதி மலைத்திருக்கும் நேரத்தில் தான் கை கொடுத்தது, சேது சமுத்திரக் கால்வாய் திட்டம். சேது சமுத்திரக் கால்வாய் மீது, இவருக்கு ஏன், இவ்வளவு கரிசனம்? தமிழக நலனுக்கா அல்லது பொருளாதார மேம்பாட்டுக்கா? பொருளாதார மேம்பாடு என்ற போர்வையில், இத்திட்டம் கொண்டு வரப்பட்டாலும், இதன் முக்கிய நோக்கம், இந்துக்கள் புனிதமாகக் கருதும், ராமர் கட்டிய பாலத்தைத் தகர்ப்பது தானோ என்ற சந்தேகம், இந்துக்களுக்கு வந்தால், அதற்கு அவர்களைக் குற்றம் சொல்ல முடியாது. ஏனெனில், தலைவரின் இதுவரை உள்ள நடவடிக்கைகள் அப்படி. இது போன்ற விஷயத்தை, ஒடிசா மாநிலத்தில் எப்படி அணுகியுள்ளனர் என்பதும், நாம் தெரிந்து கொள்ள வேண்டியதே. அங்கு, பன்னாட்டு நிறுவனமான, வேதாந்தா என்ற நிறுவனம், பல்லாயிரம் கோடிகள் முதலீட்டில், அலுமினிய தொழிற்சாலை நிறுவ முன் வந்தபோது, அதற்கு அங்குள்ள பழங்குடி மக்களிடமிருந்து எதிர்ப்பு எழுந்தது. அம்மக்கள், அங்குள்ள மலையை, தெய்வமாக மதிக்கின்றனர். வேதாந்தாவின் தொழிற்சாலைக்குத் தேவையான கனிமங்களை, மலையைக் குடைந்தே எடுக்க முடியும். பழங்குடி மக்களின் தெய்வ நம்பிக்கைக்கு எதிராக உள்ள, இந்த நடவடிக்கையை எடுப்பதற்கு முன், அவர்களைக் கலந்து ஆலோசித்து செயல்பட வேண்டும் என்று, நீதிமன்றம் பணித்திருக்கிறது.
ஒரு சில ஆயிரங்களே உள்ள பழங்குடி மக்களின், தெய்வ நம்பிக்கையை மதிக்குமாறு கூறிய நீதிமன்றம், கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கையை மதிக்காமலா போகும்! ஆனால், இதைப்பற்றி எல்லாம், தலைவருக்கு கவலை இல்லை. இந்துக்கள் மத நம்பிக்கையை, நாம் என்ன செய்தாலும் யாரும் கேட்க மாட்டார்கள் என்ற துணிச்சல். தங்கள் மத உணர்ச்சியைக் காலால் மிதித்து, இத்திட்டத்தை, முன்னெடுத்துச் செல்ல முனைந்தால், இந்துக்கள் அனைவரும் ஒன்று திரண்டு, பாடம் கற்பிக்க தீர்மானித்தால், "சாது மிரண்டால்' கதை தான்; ஏற்கனவே, மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் தி.மு.க.,வும், இந்த விஷயத்தில், அவர்களுக்கு, "ஜால்ரா' அடிக்கும் கூட்டணி கும்பலும், தாங்க மாட்டார்கள்.
மீனவர்களும் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அடிப்படையில், இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்ல... எந்த பொருளாதார மேம்பாட்டைக் காட்டி, மக்கள் உணர்வுகளை மதிக்காமல், இத்திட்டத்தை தீவிரப்படுத்த முயலுகின்றனரோ, அந்த பொருளாதார மேம்பாடும், தவறான கணக்கின் அடிப்படையில் தான் என்று எடுத்துக் காட்டப்படுகிறது. இந்நிலையில், வரும் தேர்தலில், தி.மு.க., மட்டும் மூழ்கப் போவதில்லை... இந்துக்களுக்கு எதிராகச் செயல்படுவதும், மதச்சார்பின்மை என்று, ஏதேதோ பிதற்றி விளக்கம் தருகிற, ஐக்கிய முற்போக்கு முன்னணியையும், தன்னுடன் இழுத்து மூழ்கப் போகிறது. இத்திட்டத்தை, கைவிட்டு விட்டதாக பொது அறிவிப்பு வெளியிடவில்லை என்றால், மக்கள், தி.மு.க.,வையும், அதன் கூட்டாளிகளையும் கைவிடத் தயங்க மாட்டார்கள்.
"காங்கிரஸ் கட்சி, இந்தியாவுடன் இருக்கிறதா, இல்லை பாகிஸ்தானோடு சேர நினைக்கிறதா?'' என, பா.ஜ., - எம்.பி., யஷ்வந்த் சின்கா எழுப்பிய கேள்வியால், லோக்சபாவில் கடும் அமளி உருவானது.
லோக்சபாவில் அமளி :


ஜம்மு - காஷ்மீரில், கட்டுப்பாட்டு எல்லைக்கோடு பகுதியில், இந்திய ராணுவ வீரர்கள் ஐந்து பேரை, பாகிஸ்தான் ராணுவத்தினர் சுட்டுக் கொன்ற விவகாரத்தால், லோக்சபாவில், நேற்று கடும் அமளி உருவானது. கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டதோடு, பூஜ்ஜிய நேரத்திலும், சபை அலுவல்கள் நடக்க முடியாத சூழ்நிலை உருவானது. அமளி காரணமாக, சபை மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது.
லோக்சபா நேற்று காலை கூடியதும், கேள்வி நேரம் துவங்கியது. ஆனால், ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட பிரச்னையை, பா.ஜ., - எம்.பி.,க்கள் எழுப்பி, பெரும் கோஷமிட்டனர். அவர்களுடன், முலாயம் சிங்கின் சமாஜ்வாதி எம்.பி.,க்களும் சேர்ந்து குரல் கொடுத்தனர். தெலுங்கானா தனி மாநில முடிவை எதிர்த்து, ஆந்திர காங்., - எம்.பி.,க்களும் கோஷமிட்டதால், கேள்வி நேரம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது.
மீண்டும் சபை கூடி, பூஜ்ஜிய நேரம் ஆரம்பமான போதும், சபையில் அமைதி காணப்படவில்லை. ராணுவ வீரர்கள் பலி, தெலுங்கானா பிரச்னைகளை எழுப்பி, எம்.பி.,க்கள் கோஷமிட்டனர். இந்த கூச்சல், குழப்பத்திற்கு இடையே, ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி எழுந்து, உத்தரகண்ட் மாநில நிலச்சரிவு சம்பவம் குறித்து, அறிக்கை வாசித்தார். இதன்பின், சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங், பேச அனுமதிக்கப்பட்டார். அவர் பேசியதாவது: நாட்டின் பாதுகாப்பு மிக முக்கியமானது. இந்த விஷயத்தில், எந்த விதமான சமரசத்திற்கும் இடமில்லை. ஏற்கனவே, சீனா ஆக்கிரமிப்பில் ஈடுபட்டது. தற்போது, பாகிஸ்தானும் வாலை ஆட்டியுள்ளது.சீனா மற்றும் பாகிஸ்தான் இணைந்து, இந்தியாவுக்கு விடுக்கும் அச்சுறுத்தலை, இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டுமே தவிர, மென்மையான போக்கை, மத்திய அரசு கடைபிடிக்க கூடாது. இவ்வாறு முலாயம் சிங் பேசினார்.
முன்னாள் நிதி அமைச்சரும், பா.ஜ., - எம்.பி.,யுமான யஷ்வந்த் சின்கா பேசும்போது, ""ஏற்கனவே, மும்பையில் பயங்கரவாத தாக்குதலை, பாகிஸ்தான் அரங்கேற்றியது. அதன்பிறகாவது, மத்திய அரசு, உறுதியுடன் செயல்பட்டிருக்க வேண்டும். உருப்படியான நடவடிக்கை எடுக்காமல், விட்டு விட்டது,'' என்றார்.
யஷ்வந்த் சின்கா, தொடர்ந்து பேசிய போது, காங்கிரஸ் எம்.பி.,க்கள் அவரை பேசவிடாமல் கோஷம் போட்டனர்.இதனால், எரிச்சல் அடைந்த சின்கா, ""பூஞ்ச் பகுதியில், ஐந்து ராணுவ வீரர்களை இழந்துள்ள நிலையிலும், மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க, தயங்குகிறது. உண்மையில், காங்கிரஸ், இந்தியாவுடன் இருக்கிறதா, இல்லை பாகிஸ்தானோடு சேர நினைக்கிறதா?'' எனக் கேட்டார்.