Wednesday, August 7, 2013















எல்லையை பாதுகாப்பதில் இந்திய அரசு தோல்வி
இது குறித்து குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, டுவிட்டரில் தனது கண்டனத்தை பதிவு செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, காஷ்மீரில் பூஞ்ச் பகுதியில் பாக்., ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த நமது இந்திய வீரர்கள் 5 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இது பாகிஸ்தான் ராணுவத்தின் கோழைத்தனமாக செயல். இதே போன்ற மற்றொரு சீன எல்லைப்பகுதியில், அந்நாட்டு ராணுவமும் அடிக்கடி ஊடுருவி துணிச்சலுடன் உலா வருகின்றனர். இதையெல்லாம் பார்க்கும் போது மத்தியி்ல் ஆளும் காங்.,தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தூங்கி வழிகிறதா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எல்லையை பாதுகாப்பதில் இந்தியா தோல்வியடைந்து விட்டது.ஊடுருவல் விவகாரத்திலும் அலட்சியம் காட்டி வருகிறது என்பது தெளிவாகி விட்டது. பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த கொடூர செயலை ஏற்றுக்கொள்ள முடியாது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tuesday, August 6, 2013

மத்திய திட்ட கமிஷன் அறிக்கையில், நம் நாட்டில், தனி நபர் வருவாய் உயர்ந்து விட்டது; 27 ரூபாய் சம்பாதிப்பவர்கள், ஏழைகளாக கருதப்பட மாட்டார்கள் என, தெரிவித்துள்ளது. இதே போல், மத்தியில், "மாண்புமிகு' அமைச்சர்களும், "ஐந்து ரூபாய்க்கும், பன்னிரண்டு ரூபாய்க்கும், சாப்பாடு கிடைக்கிறது. வறுமை நீங்கி, சுபிட்சமாக, நாட்டில் எல்லாரும் உள்ளனர்' எனக் கூறியுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன், 20 ரூபாய்க்கு விற்ற, ஒரு லிட்டர் பெட்ரோல், இப்போது, 70 ரூபாய்க்கு மேல் விற்கிறது. 15 ரூபாய்க்கு விற்ற, ஒரு கிலோ அரிசி, 50 ரூபாய்க்கு விற்கிறது. இதே போல், மற்ற அத்தியாவசியமான அனைத்து பொருட்களும், ஏழை, எளியவர்கள் வாங்க முடியாத நிலையில் உயர்ந்து விட்டதை, மேற்குறிப்பிட்ட அறிவு ஜீவிகள், அறியவில்லை போலும். அதிகாரத்தில் உள்ளவர்கள், நாட்டின் உண்மை நிலையை அறிந்து, எங்கு, எதை பேச வேண்டும் என்பதை தெரிந்து, மக்கள் ஏற்றுக் கொள்ளும் கருத்துகளை, சிந்தித்து பேச வேண்டும். "மாண்புமிகு' என்ற, மரியாதையான வார்த்தைக்கு ஏற்றாற் போல், அதிகாரத்திலுள்ளவர்கள், நடந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு அரசியல்வாதி களும், நாளிதழ்களை படிப்பார்களேயானால், நாட்டின் நிலைமையை, ஓரளவிற்காவது புரிந்து கொள்ளலாம்.
ஓட்டலால் வந்த ஆபத்து...!
மும்பையில், "அதிதி' என்ற ஓட்டல் உள்ளது. நம்ம ஊரு, பவன் வகையறா ஓட்டல்கள் போல், இந்த ஓட்டல், மும்பையில் பிரபலம். இதனால், இந்த ஓட்டலில் எப்போதுமே, கூட்டம் முண்டியடிக்கும். ஒருவர் சாப்பிட்டு முடிக்கும் முன்பே, அந்த சீட்டை பிடிப்பதற்காக, ஏராளமானோர் அவரைச் சுற்றி நிற்பர். "கொஞ்சம் பொறு டார்லிங்... இதோ, சார் ரசம் வாங்கிட்டாரு. இப்போ எழுந்துடுவாரு' என, மனைவியை சமாதானப்படுத்தும் கணவர்களால், ஏற்கனவே சாப்பிட்டு கொண்டிருப்பவர், அரை குறை வயிற்றோடு, கை அலம்ப வேண்டியிருக்கும். இந்த ஓட்டலில், சமீபத்தில் ஒரு விளம்பர பலகை வைத்திருந்தனர். அதில், "ஸ்பெக்ட்ரம், நிலக்கரி போன்ற விவகாரங்களில், பணத்தை அடிப்பது, மத்திய அரசுக்கு எவ்வளவு அவசியமோ, அந்த அளவுக்கு, இந்த ஓட்டலில் புல் மீல்ஸ் சாப்பிடுவதும், ரொம்ப அவசியம்' என, எழுதப்பட்டிருந்தது. இதைப் பார்த்த, கதர்ச்சட்டைக்காரர்கள், கொந்தளித்து விட்டனர். "நடந்த தவறுக்கு, மன்னிப்பு கேட்காத வரை, ஓட்டலை திறக்க விட மாட்டோம்' என, ஏராளமான காங்கிரசார் திரண்டனர். ஓட்டல்காரர் களுக்கு ஆதரவாக, பா.ஜ., மற்றும் சிவசேனா கட்சியினர், மற்றொரு புறம் திரண்டனர். இந்த விவகாரம், காங்கிரஸ் மேலிடத்துக்கு தெரிந்ததும், மகாராஷ்டிரா முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, பிரித்விராஜ் சவானை, போனில் கூப்பிட்டு, வறுத்தெடுத்து விட்டனர். "மகாராஷ்டிராவில் காங்., ஆட்சி நடக்கிறதா அல்லது பா.ஜ., ஆட்சி நடக்கிறதா? ஒரு மாநிலத்துக்கு முதல்வராக இருக்கும் உங்களை, ஓட்டல்காரர்கள் கூட மதிக்க மாட்டேன்கின்றனரே...' என, சரமாரியாக அர்ச்சனை விழுந்தது. இதனால் நொந்துபோன பிரித்வி, "அரசியலில் இருந்தே ஓய்வு பெற்று விடலாமா' என, யோசிக்க துவங்கியுள்ளார்.
பள்ளிகளில் பகவத் கீதை:


மத்திபிரதேச மாநில அரசு வரும் கல்வியாண்டான 2013-14-ம் ஆண்டில் துவக்கபள்ளிகளில் பகவத்கீதையை பாடமாக கற்றுத்தரப்படும் என அறிவித்தது. இதன் அடிப்படையில் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரையில் கற்கும் மாணவ, மாணவிகளுக்கும், சிறப்பு ஆங்கிலம் மற்றும் இந்தி கற்கும் பள்ளிகளில் மூன்றாம் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும் சிறப்பு இந்தி கற்று கொடுக்கும் பள்ளிகளில் 10-12-ம்வகுப்பு படிக்கும் மாணவர்களும் , சிறப்பு ஆங்கிலம் கற்று கொடுக்கும் பள்ளிகளில் 11-12 ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கும் ஒரு பாடமாக பகவத்கீதை பாடமாக வைக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் எதிர்ப்பு:

Monday, August 5, 2013

ராமசாமி நாயக்கர் தனது விடுதலை பத்திரிக்கையில் "முதலியார் ஒழிப்பு இயக்கம்" என்ற தலைப்பில் ஓர் தலையங்கம் எழுதினார். ஏன்? அவர் ஒரு முதலியார் மீது கடும் கோபம் கொண்டார். எனவே முதலியார்களையெல்லாம் ஒழித்து விடவேண்டுமென புறப்பட்டு விட்டார். அது தான் ராமசாமி நாயக்கர்.

யார் அந்த முதலியார்? அவர் தான் தமிழகத்தின் முன்னால் முதல்வர் திரு. பக்தவத்சலம். அவர் ஒரு முதலியார்.

தமிழகத்தைப் பொறுத்த வரை ஒரு பெரிய வியாதி உண்டு. சைக்கோத்தனமான வியாதி, அது திராவிட சித்தாந்த வியாதி. இந்த வியாதியின் மூலப்பகுதி பிராமண எதிர்ப்பு வியாதி. ஆனால் இதை ஏதோ ஒரு அறிவுசார் சித்தாந்தம் போலவே நினைத்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பவர்கள் அதிகம். இதன் ஆணிவேர் அடிவேர் தெரியாமல் மேடையில் வாந்தி எடுப்பவர்களின் திராவிட சித்தாந்த பார்ப்பன எதிர்ப்பை அப்படியே குடித்து விட்டு போகுமிடமெல்லாம் பதில் வாந்தி எடுப்பவர்கள் தான் தமிழகத்தில் அதிகம்.

ராமசாமி நாயக்கர் பேசியதெல்லாம் சித்தாந்தம் என நம்பிக்கொண்டிருக்கும் ஒரு பெருங்கூட்டம் அவரது ஜாதி எதிர்ப்பிற்கான உள்நோக்கங்களை முழுமையாக உணர்ந்திருக்க மாட்டார்கள் என்பதே உண்மை.

ராமசாமி நாயக்கரின் பிராமண எதிர்ப்பு என்பது ஒரு சித்தாந்தம் அன்று மாறாக ராமசாமி நாயக்கர் எந்த தனிப்பட்ட நபர்கள் மீதெல்லாம் கோபம் கொள்கிறாரோ அந்த ஜாதிக்காரர்களை அப்படியே ஒழித்து விட வேண்டும் என்று கூறுகிறார். இப்படிப்பட்ட ஆத்திரம் மிகுந்த குணம் ஒரு வித மனப்பிறழ்வு நிலை என்றே தோன்றுகிறது.

இது குறித்த ஒரு செய்தியைப் பார்ப்போம். ம பொ சி அவர்களோடு நெருங்கிப் பழகிய திரு மு மாரியப்பன் அவர்கள் 'சிலம்புச் செல்வர் ம பொ சியுடன் ' என்கிற தனது புத்தகத்தில் ம பொ சி யுடனான தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். அதில் ராமசாமி நாயக்கர் பற்றிய குறிப்பைப் பார்ப்போம்.

"ராமசாமி நாயக்கர் தனது விடுதலை பத்திரிக்கையில் "முதலியார் ஒழிப்பு இயக்கம்" என்ற தலைப்பில் ஓர் தலையங்கம் எழுதினார். அதில் முதல்வர் பக்தவத்சலனார் சார்ந்திருக்கும் ஜாதிக்கு எதிராகத் தாம் ஒரு போராட்டம் துவங்கப் போவதாகவும் இதுவரை தான் நடத்தி வந்த பிராமணர் எதிர்ப்புப் போராட்டம் தகுந்த பலன் கிடைக்கவில்லை என்றும் எழுதியிருந்தார். மேலும் முதல்வர் பக்தவத்சலம் அவர்களைக் கடுமையாக வார்த்தைகளால் வசை பாடியிருந்தார்." சரி, முதலியார்களையெல்லாம் சப்ஜாடாக ஒழிக்க வேண்டும் என்று ராமசாமி நாயக்கர் ஏன் கூறினார்.

தமிழகத்தின் முதல்வராக பக்தவத்சலம் தேர்வான பின்னர், பல அரசு உயர் பதவிகளை முதலியார் ஜாதியினர் பெற்று வந்தனர். ராமசாமி நாயக்கரின் செல்வாக்கு பக்தவத்சலத்திடம் செல்லுபடியாகவில்லை. அதன் பின் நடந்தவற்றையும் திரு. மு மாரியப்பன் கீழ்கண்டவாறு விவரிக்கிறார்.

"விவசாயத் துறையில் இயக்குனர் பதவியிலிருந்த பிராமணர் ஒருவர் ஓய்வு பெற்றதன் விளைவாக அந்தப் பதவி காலியாக இருந்தது. ஈ வெ ரா பிராமணர் அல்லாத ஒருவரை (தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரா என குறிப்பில்லை) அப்பதவிக்கு சிபாரிசு செய்தார். ஆனால் பக்தவத்சலமோ திரு க்ருஷ்ணமூர்த்தி என்பவரை நியமித்தார். "

மேற்கண்ட சம்பவம் ஈ வெ ரா வை கடுப்பேற்றியது, காரணம் நியமிக்கப் பட்ட க்ருஷ்ணமூர்த்தி என்பவரும் முதலியாரே. தனது செல்வாக்கு முதலியார்களிடம் பலிக்கவில்லை என்ற ஆத்திரம் ராமசாமி நாயக்கருக்கு தலைக்கு ஏறிவிட்டது. ஆக தனது சொந்த 'ஈகோ' பிரச்சனையை ஜாதிப்பிரச்சனையாக ஆக்குகிறார் ஈ வெ ரா. உடனே விடுதலையில் தலையங்கம் எழுதுகிறார்.

"முதலியார் ஒழிப்பு இயகம்" என்று!

ஆக ராமசாமி நாயக்கரை ஏதோ சித்தாந்த வாதி போல தூக்கிக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அவரது கால் நக்கிகளெல்லாம் கொஞ்சம் நின்று நிதானித்து புரிந்து கொள்ள வேண்டும். ஈ வெ ரா வின் எதிர்ப்புக்களெல்லாம் அவரது செல்வாக்கை நிலை நிறுத்தும் சுயநலப் போராட்டமாகத்தான் இருந்திருக்கிறதே ஒழிய சமூகப்போராட்டம் அல்ல என்பதை.

அப்படித்தான் யாரோ சில பிராமணர்கள் மீது தனக்கு இருந்த ஆத்திரத்தை ஒட்டு முத்தமாக பிராமண ஜாதியினர் மீது ராமசாமி நாயக்கர் திணித்திருக்கிறார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

இப்படி கொசுவிற்காக வீட்டைக் கொளுத்துவது என்பது சித்தாந்தமா அல்லது மனநோயா என்று வரலாற்றை உற்று நோக்குபவர்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். தன் சுயநல ஆதிக்கமும் செல்வாக்கும் செல்லுபடியாகவில்லை என்றால் ஒரு சமூகத்தையே அழித்துவிடுவது என்கிற காட்டுமிராண்டித் தனத்தை தமிழகத்தில் ஒரு கூட்டமே சித்தாந்தமாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அத்தகைய கூட்டத்தினரின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது அத்தகையோரின் அடிப்படை மனோநிலையின் மீதே சந்தேகம் உண்டாகி விடுகிறது.

1950களின் இறுதியில், தமிழக அதிகாரிகள் பலர் மலையாளிகளாக இருப்பதைப் பட்டியல் போட்டுக் காட்டி எதிர்ப்புத் தெரிவித்தவர் பெரியார்தான். இப்படியே நிலைமை தொடருமானால், ‘மலையாளிகள் எதிர்ப்பு மாநாட்டை’ நடத்த வேண்டியிருக்கும்
என்று எச்சரித்தவரும் ராமசாமி நாயக்கர் தான்.
ஹிந்துக்களை ஒன்றிணைக்கும் RSS.
தனது 5 வது மகளையும் ஒரு ஸ்வயம் சேவகருக்கே ( RSS ) திருமணம் முடித்து வைத்த " லல்லு பிரசாத் யாதவ் ".
அரசியலுக்காக மட்டுமே சங்கத்தை குறை கூறும் லல்லு பிரசாத் தனது 5 பெண்களையும் சங்க ஸ்வயம் சேவகருக்கே மனம் முடித்து வைத்தார். அவர் சொல்லிய காரணம் என் மகள் நன்றாக வாழ வேண்டும். தனது 6 வது மகளையும் ஒரு ஸ்வயம் சேவகருக்கே மனம் முடித்தும் தருவாராம்.
"தலைநகர் டில்லியில், 5 ரூபாய்க்கு, வயிறு நிறைய மதிய உணவு சாப்பிடலாம்' என, காங்கிரஸ் எம்.பி., ரஷீத் மசூத் கூறியுள்ளார். இவரை விட ஒருபடி மேலே சென்று, "1 ரூபாய்க்குக் கூட சாப்பாடு கிடைக்கிறது' என, மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார். இதற்கும் மேலாக, பழம் பெரும் நடிகரும், காங்., - எம்.பி.,யுமான ராஜ்பப்பர், "மும்பையில், 12 ரூபாய்க்கு, முழுச் சாப்பாடு கிடைக்கிறது' என, கூறியுள்ளார். நாட்டின் வளர்ச்சியின், தலை எழுத்தை நிர்ணயிக்கும், திட்டக் கமிஷன், கிராமங்களில், 27 ரூபாயும், நகரங்களில், 33 ரூபாயும் சம்பாதிப்பவர்கள் ஏழைகளாகக் கருதப்பட மாட்டார்கள் என, தெரிவித்திருப்பது, இந்த கமிஷனில் உள்ளவர்களின் அறிவுத் திறனை அடிக்கோடிட்டு காட்டுகிறது. இதன் தலைவராக, பொருளாதார மேதை, பிரதமர் மன்மோகன் சிங்கையும், துணை தலைவராக மான்டேக்சிங் அலுவாலியாவையும் பெற்றிருப்பது, இந்தியாவின், "பெரும் பாக்கியம்!' டில்லி ஜிம்மா மசூதி அருகே, 5 ரூபாய்க்கும், மும்பையில், 12 ரூபாய்க்கும் சாப்பாடு கிடைப்பதால், மற்ற இடங்களில் இருக்கும் ஏழைகள், அங்கு போய் வர முடியுமா? சென்னையில், "அம்மா' உணவகத்தில், 3 ரூபாய்க்கு, தயிர்சாதம், 5 ரூபாய்க்கு, சாம்பார் சாதம், இட்லி, 1 ரூபாய்க்கும் கிடைக்கிறது என்பதற்காக, அந்த இடங்களுக்கு எல்லோரும் போய் வர முடியுமா? இவ்வளவு கூறிய நம் அரசியல்வாதிகள், கோவில்களில், மதியம், அன்னதானம் அளிக்கப்படுவதை, இந்தியாவில், மதிய உணவு இலவசமாகக் கிடைக்கிறது என்று கூறலாமே. நட்சத்திர ஓட்டல்களில், "ஏசி' அறையில், ஓ.சி., சாப்பாடு சாப்பிட்டு, "ஏசி' காரில் போகும் இவர்கள், ரோட்டுக்கு வந்து, மக்களிடம் பேசி, உண்மை நிலையை அறிந்து, பின் தங்கள் கருத்துகளை வெளியிட வேண்டும். இல்லையேல், அடுத்த ஆண்டு, பார்லிமென்டுக்கு போய் வர முடியாமல், வீடுகளில் இருக்க வேண்டியது தான்!