Wednesday, February 13, 2013
ons's photo.
பார்த்துக்கங்க, நானும் ஏழைதான், ஏழைதான், ஏழைதான்.....
இது “தி அதர் சைட்” எனும் மாத இதழ் வெளியிட்டிருக்கும் ஏழை கருணாநிதியின் குடும்ப சொத்துப் பட்டியல்:
1. 6,124 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட கருணாநிதியின் கோபாலபுரத்து வீடு – மதிப்பு 5 கோடி.
2. முரசொலி மாறனின் கோபாலபுரத்து வீடு – மதிப்பு 5 கோடி.
3. 1,200 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட முரசொலி செல்வத்தின் கோபாலபுரத்து வீடு – மதிப்பு 2 கோடி.
4. கோபாலபுரத்தில் சொர்ணத்தின் வீடு – மதிப்பு 4 கோடி.
5. கோபாலபுரத்தில் மு.க.முத்துவின் வீடு – மதிப்பு 2 கோடி.
6. கோபாலபுரம் அமிர்தத்தின் வீடு – மதிப்பு 5 கோடி.
7. மகள் செல்வி, எழிலரசியின் கோபாலபுரம் வீடு – மதிப்பு 2 கோடி.
8. சி.ஐ.டி காலனியில் 9,494 சதுர அடிகள் பரப்பளவுகொண்ட இடத்தில் 3,500 சதுர அடிகளுக்கு கட்டப்பட்டு இருக்கும் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளின் வீட்டு மதிப்பு – 12 கோடி.
9. மண்ணிவாக்கம் கிராமத்தில் ராஜாத்தி அம்மாளுக்கும், கனிமொழிக்கும் இருக்கும் 300 ஏக்கரின் மதிப்பு 4.5 கோடி.
10. ராயல் ஃபர்னிச்சர் என்ற பெயரில் இருக்கும் ராஜாத்தி அம்மாளின் ஷாப்பிங் நிறுவனத்தின் மதிப்பு – 10 கோடி.
11. 2,687 சதுர அடிகள்கொண்ட நிலப்பரப்பில் 2,917 சதுர அடியில் கட்டப்பட்டு இருக்கும் மு.க.ஸ்டாலின் வேளச்சேரி வீட்டு மதிப்பு – 2 கோடி.
12. நுங்கம்பாக்கத்தில் இருக்கும் உதயநிதி ஸ்டாலினின் ஸ்னோ ஃபவுலிங் சென்டரின் சொத்து மதிப்பு – 2 கோடி.
13. சென்னை போட் கிளப்பில் இருக்கும் கலாநிதி மாறனின் 16 கிரவுண்ட் மாளிகையின் நில மதிப்பு மட்டும் – 100 கோடி.
14. கொட்டிவாக்கத்தில் இருக்கும் மாறன் சகோதரர்களின் பண்ணை வீட்டின் மதிப்பு – 10 கோடி.
15. போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அருகில் இருக்கும் எம்.எம் இண்டஸ்ட்ரீஸின் மதிப்பு – 2 கோடி.
16. 6 கிரவுண்ட் பட்டா நிலத்திலும், 1,472 சதுர அடி புறம்போக்கு நிலத்திலும் அமைந்து இருக்கும் கோடம்பாக்கம் ‘முரசொலி’ அலுவலகக் கட்டடத்தின் மதிப்பு – 20 கோடி.
17. மகாலிங்கபுரத்தில் 2 கிரவுண்ட் நிலத்தில், சன் கேபிள் விஷன் சொத்து மற்றும் தொலைக்காட்சி உபகரணங்களின் மதிப்பு – 5 கோடி.
18. சன் டி.வி-க்கு எம்.ஆர்.சி. நகரில் இருக்கும் 32 கிரவுண்டின் மதிப்பு – 100 கோடி.
19. கோரமண்டல் சிமென்ட் கம்பெனியில் இருக்கும் 11 சதவிகித பங்குகளின் மதிப்பு – 50 கோடி.
20. பெங்களூருவில் இருக்கும் செல்வத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு – 4 கோடி.
21. பெங்களூரு – மைசூர் நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் செல்வியின் ஒரு ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு – 80 கோடி.
22. மாறன் சகோதரர்களின் 1.84 ஏக்கர் பண்ணை வீட்டின் மதிப்பு – 120 கோடி.
23. பெங்களூருவில் 10 கிரவுண்டில் அமைந்திருக்கும் உதயா டி.வி. சேனலின் நில மதிப்பு – 108 கோடி.
24. பீட்டர்ஸ் ரோட்டில் இருக்கும் மு.க.தமிழரசுவின் ‘ரெயின்போ இண்டஸ்ட்ரீஸின்’ மதிப்பு – 48 கோடி.
25. அந்தியூரில் இருக்கும் மு.க.தமிழரசுவின் 13 கிரவுண்ட் பண்ணை வீட்டின் மதிப்பு 30 லட்சம்.
26. புது டெல்லியில் இருக்கும் சன் டி.வி. அலுவலகத்தின் மதிப்பு – 50 கோடி.
27. எக்ஸ்பிரஸ் எஸ்டேட்டில் இருக்கும் பங்குகளின் மதிப்பு – தெரியவில்லை.
28. தினகரன் பப்ளிகேஷன்ஸ் – மதிப்பு தெரியவில்லை.
29. சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் – மதிப்பு தெரியவில்லை
30. முரசொலி அறக்கட்டளை – மதிப்பு தெரியவில்லை
31. ஒரு ஷேர் 48 என்ற கணக்கில் ஸ்பைஸ் ஜெட் ஏர்வேஸில் 37 சதவிகிதப் பங்குகளை கன்ஸாகரா நிறுவனத்திடம் இருந்து அமெரிக்காவின் ‘வில்பர் ராஸ் அண்ட் ராயல் ஹோல்டிங்குஸ் சர்வீஸர்’ மூலமாக வாங்கப்பட்டது. இதை வாங்கிய சமயத்தில் 13,384 கோடிக்கு வாங்கியதாக கலாநிதி மாறனே பிரகடனம் செய்திருந்தார்.
32. மதுரை, மாடக்குளம் கிராமத்தில் தயாளு அம்மாள் அறக்கட்டளைக்கு இருக்கும் நிலத்தின் மதிப்பு – தெரியவில்லை.
33. தஞ்சாவூர் மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் கருணாநிதிக்கு இருக்கும் 21.30 ஏக்கரின் மதிப்பு – தெரியவில்லை.
34. திருவள்ளூர் மாவட்டத்தில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் 3.84 ஏக்கரின் மதிப்பு – 1 கோடி.
35. துர்கா ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் 3,680 சதுர அடி நிலத்தின் மதிப்பு – 60 லட்சம்
36. மதுரை வடக்கு தாலுக்கா – உத்தன்குடி கிராமத்தில் இருக்கும் அழகிரியின் 2.56 ஏக்கர் நிலத்தின் மதிப்பு 2 கோடி.
37. மதுரை வடக்கு தாலுக்கா காலாத்திரி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 7.53 ஏக்கரின் மதிப்பு – 2 கோடி.
38. மதுரை தல்லாகுளத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.5 ஏக்கரின் மதிப்பு – 5 கோடி.
39. மதுரை வடக்கு தாலுக்காவில் சின்னப்பட்டி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 1.54 ஏக்கரின் மதிப்பு – 40 லட்சம்.
40. மதுரை திருப்பரங்குன்றத்தில் அழகிரிக்கு இருக்கும் 12 சென்ட் நிலத்தின் மதிப்பு – 50 லட்சம்.
41. மதுரை தெற்கு தாலுக்காவில் மாடக்குளம் கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 36 சென்ட் நிலத்தின் மதிப்பு – 1 கோடி.
42. மதுரை தெற்கு பொன்மேனி கிராமத்தில் அழகிரிக்கு இருக்கும் 18,535 சதுர அடி நிலத்தின் மதிப்பு – 2 கோடி.
43. மதுரை சத்திய சாய் நகரில் 21 சென்டில் உள்ள அழகிரி வீட்டின் மதிப்பு – 2 கோடி.
44. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுக்காவில் தொகரை கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.6 சென்ட் நிலத்தின் மதிப்பு – 60 லட்சம்.
45. மதுரை மாவட்டம் (நாகமலைப் புதுக்கோட்டை) உலியம்குளம் கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 5.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு – 20 லட்சம்.
46. மதுரை மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 12.01 ஏக்கர் நிலத்தின் மதிப்பு – 50 லட்சம்.
47. மதுரை, திருமங்கலம் டி.புதுப்பட்டி கிராமத்தில் காந்தி அழகிரிக்கு இருக்கும் 21.32 ஏக்கர் நிலத்தின் மதிப்பு – 50 லட்சம்.
48. கொடைக்கானல் மலையில் 82.3 சென்ட் சூழ இருக்கும் காந்தி அழகிரியின் பண்ணை வீட்டு மதிப்பு – 5 கோடி.
49. மாடக்குளம் கிராமத்தில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 18.5 சென்ட் நிலத்தின் மதிப்பு – 50 லட்சம்.
50. சென்னைக்கு அருகில் சோழிங்கநல்லூரில் தயாநிதி அழகிரிக்கு இருக்கும் 4,200 சதுர அடியின் மதிப்பு – 2.5 கோடி.
51. சென்னை திருவான்மியூரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 3,912 சதுர அடி நிலத்தின் மதிப்பு – ரூ 3 கோடி.
52. மதுரை சத்ய சாய்நகரில் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 4,378 சதுர அடிகொண்ட கல்யாண மண்டபத்தின் மதிப்பு – 3 கோடி.
53. சென்னை, மாதவரம் பால் பண்ணைக்கு அருகில் உள்ள ஆர்.சி.மேத்தா நகரில் இருக்கும் தயாநிதி அழகிரியின் அடுக்குமாடிக் குடியிருப்பின் மதிப்பு – 1 கோடி.
54. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் இருக்கும் தயாநிதி அழகிரிக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தின் மதிப்பு – 2 கோடி.
55. மதுரை சிவரக்கோட்டையில் இருக்கும் அழகிரிக்கு சொந்தமான தயா இன்ஜினீயரிங் காலேஜ் மதிப்பு – தெரியவில்லை.
56. மதுரையில் 5 கிரவுண்டில் இருக்கும் தயாநிதி அழகிரியின் 8 மாடிகள்கொண்ட ‘தயா சைபர் பார்க்’ மதிப்பு – தெரியவில்லை.
57. மதுரை பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் ‘தயா டெக்னாலஜிஸ்’ என்ற நகர்ப்புற சொத்தின் மதிப்பு – 1 கோடி.
58. சென்னை அண்ணா சாலையில் இருக்கும் வணிக வளாகம் (கதவு இலக்க எண்: 271-ஏ) மதிப்பு – 5 கோடி. இது கனிமொழிக்குச் சொந்தமானது.
59. ‘வெஸ்ட் கேட் லாஜிஸ்ட்டிக்ஸ்’ என்ற கம்பெனியில் கனிமொழிக்கு இருக்கும் பங்கின் மதிப்பு – 20 கோடி.
60. கலைஞர் டி.வி-யில் கனிமொழிக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு – 30 கோடி.
61. ஊட்டியில், வின்ட்ஸர் எஸ்டேட்டில் இருக்கும் 525 ஏக்கர் தேயிலை தோட்டத்தின் மதிப்பு – 50 கோடி. இது கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது.
62. கலைஞர் டி.வி-யில் தயாளு அம்மாளுக்கு இருக்கும் பங்குகளின் மதிப்பு – 90 கோடி.
63. அந்தமான் தீவுகளில் இருக்கும் 400 ஏக்கர் கலைஞர் குடும்பத்துக்கு சொந்தமானது – மதிப்பு தெரியவில்லை
64. கூர்க் (குடகு மலை) காபி தோட்டம், கலைஞர் குடும்பத்துக்குச் சொந்தமானது – மதிப்பு தெரியவில்லை.
65. தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெரிய நகரத்திலும் மல்டிப்ளெக்ஸ் கட்ட கலைஞர் குடும்பத்துக்குத் திட்டம் உள்ளது.
66. எஸ்.டி. கூரியர் என்ற கம்பெனிக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் மாறன் சகோதரர்களுடையதே.
67. தமிழ்நாடு ஹாஸ்பிடல்ஸுக்குப் பின்னால் இருக்கும் ‘சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனை’ – மாறனின் மகள் அன்புக்கரசிக்கு சொந்தமானது.
68. சாய்பாபாவுக்கும் கருணாநிதியின் குடும்பத்துக்கும் ஏற்பட்ட ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடுத்து, ஆபட்ஸ்பரி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை மாறன் சகோதரர்கள் கட்ட இருக்கும் மருத்துவமனைக்காக ஒப்படைக்க உள்ளார்கள்.
69. கோவை (புரூக் பாண்ட் சாலையில் இருக்கும் புரூக் ஃபில்ட்ஸ் வளாகத்தின் ஒரு பகுதியை) ஆர்.எம்.கே.வி. கடை அமைந்திருக்கும் ஒரு சொத்து கனிமொழிக்கு சொந்தமானது என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.
NOTE: இங்கு அழகிரி, கனிமொழியின் சொத்துக்கள்
சேர்க்கப்படவில்லை. Spectrum scam money not included

Monday, February 11, 2013
மத்தியில், ஆளும் காங்., தலைமையிலான அரசு, தன் கட்டுப்பாட்டை இழந்து,
வெகு நாட்களாகி விட்டது. ஒரு கமிஷன் ஏஜன்டாகவே, தற்போது செயல்பட்டு
வருகிறது.மக்களின் அடிப்படை தேவைகளான, பொருட்களின் விலையை நிர்ணயம்
செய்யாமல், அதை விற்பனை செய்பவர்கள் கையிலேயே, ஒப்படைத்து விட்டதால்,
பெட்ரோல், டீசல், காஸ் விலை நாள்தோறும் விலையேறிக்
கொண்டிருக்கின்றன.சிலிண்டர் வினியோகத்தை, ஏஜன்சி எடுத்துள்ளவர்கள், இன்று,
மெகா கோடீஸ்வரர்களாக உலா வருகின்றனர்.
காரணம், இவர்களே செயற்கையாக காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி, விலையை கூடுதலாக கொடுத்து, நுகர்வோர் வாங்கும் சூழலை உருவாக்குகின்றனர்.இவை ஒரு புறம் இருக்க, அரசு மானிய விலையுடன், ஒரு சிலிண்டரை வீட்டில் சென்று இறக்குவதற்கு, 403 ரூபாய் என, நிர்ணயம் செய்துள்ளது. அதிக பட்சம், 5 கி.மீ., தூரம் வரை, காஸ் நிறுவனம், டோர் டெலிவரிக்கு, 403 ரூபாய்க்கு ரசீது கொடுத்து, இறக்க வேண்டும்.ஆனால், நடைமுறையில், ஒவ்வொரு சிலிண்டரையும், வீடுகளில் இறக்கும் போது, 10 முதல், 50 ரூபாய் வரை, கூடுதலாக, வசூலிக்கப்படுகிறது.இந்த கூடுதல் வசூலுக்கு, ரசீது ஏதும் கொடுப்பதில்லை. இந்தத் தொகையை, ஏஜென்சியும் பங்கு போட்டுக் கொள்வதாக கேள்வி. இப்படி, மாதத்திற்கு, பல லட்ச ரூபாயையும், முறைகேடாக ஈட்டுகிறது.மேலும், காஸ் ஏஜன்சி உரிமையாளர்களும், மணல் தாதாக்களை போல், காஸ் ஏஜன்சி மாபியாக்களாக உருவாகி விட்டனர். இவர்கள், பெரும்பாலும், அரசியல் செல்வாக்கு மிக்கவர்களாக உள்ளனர். இவர்கள் தவறு செய்தால், அவர்கள் காப்பாற்றி விடுகின்றனர்.பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, மானிய சிலிண்டர் ஒன்றுக்கு, 403 ரூபாய் மட்டும் கொடுத்து, ரசீது வாங்க வேண்டும்.

நிழல் தீவிரவாதிகள்
அடுத்தவரை அழிப்பதையே குறிக்கோளாக கொண்டவர்கள் தீவிரவாதிகள் என்றால் அந்த
தீவிரவாதிகளுக்கு துனைபோகும் அல்லது ஆதரவு தரும் நபர்களை என்ன வாதிகள்
என்று அழைப்பது ?
தீவிரவாதிகளாவது தங்கள் செயலை வெளிப்படையாக
செய்து பிடிபட்டால் சிறை தண்டனையும் மரண தண்டனையும் பெறுகிறார்கள். ஆனால்
அவர்களுக்கு அமைதியாய் ஆதரவு தரும் நிழல் தீவிரவாதிகளுக்கு என்ன
கிடைக்கிறது.
உதாரணத்திற்கு
முகப்புத்தகத்தில், அப்சல் குரு என்ற கேடு கெட்ட இழிச்செயலை புரிந்த ஒரு
தீவிரவாதிக்கு, பல நிழல் தீவிரவாதிகள் ஆதரவு தருகிறார்கள். அவன்
நல்லவனாம், வல்லவனாம், படித்தவனாம், பன்புள்ளவனாம்.
கருத்து
சுதந்திரத்தை கேடயமாக பயன்படுத்தி கொண்டு, ஜனநாயக நாடுகளில் இந்த நிழல்
தீவிரவாதிகள் கொடூரமான கொலைகாரர்களை தியாகிகள் போல சித்தரிக்கிறார்கள்.
ஒரு தீவிரவாதி பிடிபட்டு போனால் அவன் சுயசரிதையை எல்லாம் எழுதி அவனை பெரிய
மகானை போல் சித்தரிக்கிறார்கள். தீவிர விசாரனைக்கு பிறகு 2006 ம் ஆண்டே,
உச்ச நீதி மன்றத்தால் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட அப்சல் குரு என்ற
கொடுங்கோலனுக்கு அந்த தண்டனையை தருவதற்கு 8 ஆண்டுகள் எடுத்துக்கொண்டுள்ளது
இந்த மத்திய அரசாங்கம். தண்டனை வழங்கப்பட்டதை நிறைவேற்றுவதற்கு மத்திய
அரசாங்கம் இத்தனை தயக்கம் காட்டும் அளவிற்கு பின்புலமாய் செயல்படுகிறார்கள்
இந்த நிழல் தீவிரவாதிகள்.
இந்த நிழல் தீவிரவாதிகள் யார் ?
பெரும்பாலும் இவர்கள் சாதாரண மக்களின் சாயலிலேயே இருக்கிறார்கள். வேலைக்கு
செல்பவராய், சுய தொழில் புரிபவராய், மாணவர்களாய் என நம்மை போலவே இவர்கள்
இருந்தாலும், மதவெறி எனும் நஞ்சு இவர்கள் அடிமனதில் ஆழ பதிந்துள்ளது. தன்
மதத்தை சார்ந்தவன் எத்தனை ஈனச் செயல் புரிந்திருந்தாலும், அதை ஏதாவது
காரணங்கள் சொல்லி நியாயப்படுத்துவது, நிழல் தீவிரவாதிகளின் சுபாவம். இந்த
நிழல் தீவிரவாதிகள் இன்னும் ஒரு படி மேலே போய், போராடவும் செய்கிறார்கள்.
அப்சல் குருவின் தூக்கிற்கு போராட்டம் நடத்த போவதாய் சில இயக்கங்கள்
அறிவித்துள்ளது ஒரு சிறந்த உதாரணம்.
ஜனநாயகத்தில் என்ன
செய்தாலும் கேட்பதற்கு ஆளில்லை என்ற நிலையை இவர்கள் ஏற்படுத்துகிறார்கள்.
இப்படி ஒரு ஜனநாயகம் நமக்கு தேவையா ? ஒரு அரசாங்கத்தை தன் கடமையை செய்ய
கூட தடுக்கும் அளவிற்கு இவர்கள் அச்சுறுத்துகிறார்கள் என்றால்
சாமானியர்களின் கதி என்ன ?
தீவிரவாதிகள் இரயிலை கொளுத்தினால் நாம்
பேசாமல் இருக்க வேண்டும், கோவிலை தரைமட்டமாக்கினால் அமைதி காக்க
வேண்டும், அமேரிக்காவில் முஹம்மது நபியை இழிவு படுத்தினால் இங்கே வாகனங்கள்
கொளுத்தப்படும் நாம் மௌனம் காக்க வேண்டும், பர்மாவில் முஸ்லீம்களுக்கு
ஏதாவது என்றால் இங்கே வடக்கிழக்கு மக்கள் அடித்து விரட்டபடுகின்றனர், நாம்
வேடிக்கை பார்க்க வேண்டும். போரில் இறந்த நம் ஜவான்களின் நினைவிடம்
பட்டப்பகலில் அடித்து நொறுக்கப்படுகிறது. திரைப்படம் எடுப்பவர்கள் இவர்களை
கேட்டுதான் எல்லாம் செய்யவேண்டும் என்று ஆர்பாட்டம். இப்படி
எதற்கெடுத்தாலும் வெறியோடு தரிகெட்டு திரிகின்றனர் இந்த நிழல்
தீவிரவாதிகள்.
தீவிரவாத செயல்களை புரிபவர்கள்தான் தீவிரவாதிகள்
என்றில்லை, மனதளவில் அத்தகைய எண்ணத்தை வளர்த்துக் கொண்டு, அத்தகைய செயல்களை
புரிபவர்களுக்கு பக்கபலமாய் இருக்கும் இந்த நிழல் தீவிரவாதிகளும்,
தீவிரவாதிகள் தான். இவர்களை அரசாங்கம் ஓட்டு வங்கியாக பார்க்காமல் இரும்பு
கரம் கொண்டு அடக்க வேண்டும். இல்லையென்றால் நம் நாடு கூடிய விரைவில்
பாகிஸ்தானை போல உள்நாட்டு போரிலேயே காலத்தை கழிக்க வேண்டி வரும்
Saturday, February 2, 2013
NANGAL
ENTRAL RATHTHAM NINGADA THAKKALI SATTINIYA சமீபத்தில், ஜெய்ப்பூரில்
நடந்த காங்கிரசின் சுயபுராணக் கச்சேரி, பலத்த ஜால்ராக்களின் கரகோஷத்துடன்
நடந்து முடிந்தது.இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் உட்பட, அனைத்து
பிரமுகர்களும், "மதவாதம்' என்று, பா.ஜ.,வை சாடியுள்ளனர். நம் நாட்டில், பல
மதங்கள் இருந்தாலும், இன்னும் ஒற்றுமையாக வாழ்வதால் தான், உலகளவில்,
இந்தியா, தனித்து தலை நிமிர்ந்து நிற்கிறது.முல்லா பாய் வீட்டுக்
கல்யாணத்திற்கு, ஆல்பர்ட் ஆட்டோவில், நல்லமணி ஐயர் போய் வந்தார் என்பது,
நம் நாட்டில் மட்டுமே நடக்கும் அதிசயம். நாட்டு நடப்பு, இப்படி அமைதியாகப்
போய்க் கொண்டிருப்பது, காங்கிரசிற்கு பொறுக்கவில்லை போலும். வாய்க்கு வாய்,
"மதவாதம், மதச் சார்பின்மை' என்று, பிதற்றிக் கொண்டே இருக்கிறது.உள்துறை
அமைச்சர், ஒரு படி மேலே சென்று, "காவி பயங்கரவாதம்' என்கிறார். எதிர்ப்பு
கிளம்பியதும், "நான் அப்படிப் பேசவில்லை, இப்படி பேசவில்லை' என, அசடு
வழிகிறார்.ஏன் இந்த வேண்டாத வேலை?ஒட்டு மொத்த இந்தியர்களில், 75 சதவீத
பேர், இந்துக்களாக இருக்கும் போது, அவர்களின் ஓட்டு இல்லாமல், ஆட்சியைப்
பிடிக்க முடியாது என்பது, காங்கிரஸ் கட்சியே அறிந்திருக்கும் உண்மை. நிலைமை
இப்படி இருக்கும் போது, மதவாதம் பற்றிப் பேச வேண்டிய அவசியம் என்ன?இவர்கள்
மதவாதம் என்று சொல்வதெல்லாம், இந்து மதத்திற்கு எதிராகத் தானே தவிர, வேறு
எந்த மதங்களையும் குறிப்பிடவில்லை. தனியாக, எங்கும் நிற்கத் துணிவு இல்லாத
கம்யூனிஸ்டுகளும், மதவாதம் என்று குறிப்பிடுவது, பா.ஜ.,வைத் தான்."அரசியல்
காமெடி சூப்பர் ஸ்டார்' லாலு பிரசாத் யாதவ், பா.ஜ., எதைச் செய்தாலும்
எதிர்ப்பாராம். இப்படிப்பட்ட ஒரு அரசியல்வாதி, நாட்டுக்குத் தேவையா?பா.ஜ.,
என்பது, இந்து மதத்தைச் சார்ந்த ஒரு அரசியல் கட்சி தானே தவிர, மதவாதக்
கட்சி அல்ல."ஒரு மனிதன் மதம் மாறுவது, அவனது சுதந்திரம்; ஆனால், அவனை மதம்
மாற்ற முயற்சி செய்வது குற்றம். நாட்டில், எல்லாருக்கும் சம உரிமை
வேண்டும். படித்த இளைஞர்களுக்கு, தகுதிக்கேற்ப வேலை வேண்டும்; இதில்
சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டவர் என்று ஏன் பிரிக்க வேண்டும்?' என்பது
தானே, பா.ஜ.,வின் கொள்கை.இதில், தவறு என்ன இருக்கிறது? இதை ஏன், காங்கிரஸ்,
மதவாதம் என, திரிக்கிறது? சோனியா கூட, தன் மகள் பிரியங்காவிற்கு, ராபர்ட்
வதேரா என்ற கிறிஸ்தவரைத் தானே மணமுடித்து வைத்திருக்கிறார். இது
மதவாதமாகாதா?
Friday, February 1, 2013
புதிய திருத்தங்களுடன் "லோக்பால்' மசோதாவை
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய திருத்தங்கள் என்ன என்பது விரிவாகத் தெரிவிக்கப்படவில்லை என்றாலும்,
லோக்பால் அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் சி.பி.ஐ. (மத்தியப் புலனாய்வுக்
கழகம்) அதிகாரிகளைக்கூட கொண்டுவரவில்லை என்பது மட்டும் தெளிவு.
ஊழல் தொடர்பான கூடுதல் விசாரணை தேவைப்படும் அரிய வழக்குகளை - லோக்பால் விரும்பினால் - சி.பி.ஐ.-யிடம் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கச் செய்யலாம் என்பதுதான் சென்ற ஆண்டின்போது, இதே விவகாரத்தில் மத்திய அரசு தெரிவித்த கருத்து. அதே கருத்தில் இப்போதும் நிலையாக நிற்கிறார்கள்.
விசாரணை நடத்தும்படி ஒரு வழக்கை சி.பி.ஐ.-யிடம் ஒப்படைத்தால், லோக்பால் நீதிமன்றமும் மற்ற நீதிமன்றம் போலத்தான் ஆகிப்போகும். சி.பி.ஐ.யிடம் விசாரணையை விரைவுபடுத்துங்கள் என்று வலியுறுத்தலாம். சி.பி.ஐ. சரியாக, அக்கறையுடன் விசாரணை நடத்தவில்லை என்று குற்றம் சொல்லலாம். ஆனாலும் சி.பி.ஐ. அளிக்கும் அறிக்கையை நிராகரிக்க முடியாது.
சி.பி.ஐ. என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்வரை, அது மத்திய அரசின் சொல்லுக்கு கட்டுப்பட்டுத்தான் நடந்துகொள்ளும். ஆட்சிக்கு எண்ணிக்கை பலம் குறைந்தால் மாயாவதியின் ஊழல்களை புரட்டிப் பார்க்கும். முலாயம் சிங் யாதவின் ஊழல்களைத் தேடிப் போகும். அவர்கள் தங்கள் ஆதரவை மத்திய அரசுக்குத் தெரிவித்தவுடன் இந்த விசாரணைகள் மந்தப்படும், அல்லது மறக்கப்படும். சி.பி.ஐ. என்பது மத்திய அரசு, தனக்கு "சாதகமில்லாத நபர்களை' தனது வழிக்குக் கொண்டுவரப் பயன்படுத்துகின்ற மிக எளிய, ஆனால் வலிமையான ஆயுதமாகத்தான் இதுவரை இருந்து வந்திருக்கிறது.
"2ஜி' அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் இதுவரை எந்தவிதமான, உருப்படியான தீவிர விசாரணையையும் சி.பி.ஐ. மேற்கொள்ளவில்லை என்பது உலகம் அறிந்த உண்மை. இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் சிலருடைய பணம் எத்தனை கோடி ரூபாய் ஸ்விட்சர்லாந்து வங்கியில் இருக்கிறது என்று "விக்கி-லீக்ஸ்' பட்டியல் வெளியிடுகிறது. ஆனால் சி.பி.ஐ.யோ, ""எங்களால் மலேசியா, சிங்கப்பூர், மோரீஷஸ் தீவுகளில் ஆதாரங்களைத் திரட்ட முடியவில்லை. அவர்கள் "அரசியல் பலம் வாய்ந்தவர்களாக' இருக்கிறார்கள்'' என்று வெட்கமே இல்லாமல் சொல்கிறது.
இந்த வழக்கில் பணப்பரிமாற்றம் எவ்வாறு நடந்துள்ளது என்பதை முறையாகத் தேடிச் சென்றாலேபோதும், அனைத்து ஆதாரங்களையும் திரட்டிவிட முடியும். ஆனாலும் இயலாமைக்குக் காரணங்களைப் பட்டியலிடுகிறது சி.பி.ஐ. காரணம், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் தொடர்புடையவர்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிப்போர்.
மத்திய அமைச்சர் வீட்டில் முறைகேடாக ஒரு தொலைபேசி இணைப்பகமே செயல்பட்டிருக்கிறது என்பது சி.பி.ஐ. விசாரணையில் தெரியவந்தாலும், சி.பி.ஐ. இந்த வழக்கில் தொடர்புடையவர்களைக் கைது செய்வதற்கான அடிப்படை ஆதாரம் இருப்பதை சி.பி.ஐ.க்கான நீதிமன்றத்தில் தெரிவிக்கவில்லை. விளைவு? குற்றம் செய்தவர்களைக் கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு கொடுத்தால், "சி.பி.ஐ.க்கான நீதிமன்றத்தில்தான் இந்த உத்தரவு சாத்தியம்' என்று மனு தள்ளுபடியாகிறது. சி.பி.ஐ. நீதிமன்றத்தில் இந்த ஆதாரங்களை, சி.பி.ஐ. அளிக்காத நிலையில், அந்த நீதிமன்றமும் என்ன உத்தரவு வழங்க முடியும்?
ஆகவேதான், அண்ணா ஹசாரே உள்ளிட்ட அனைவரும் சி.பி.ஐ. எனும் அமைப்பு லோக்பாலுக்குக் கட்டுப்பட்டதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். கடந்த டிசம்பர் மாதம் ஒரு பேட்டியில் ஆவேசமாகப் பேசிய அண்ணா ஹசாரே, லோக்பால் வசம் சி.பி.ஐ. இருந்தால், ப.சிதம்பரம் இந்நேரம் ஜெயிலில் இருப்பார் என்றுகூட குறிப்பிட்டார். அது தெரிந்த, மத்திய அரசு சி.பி.ஐ., இந்த லோக்பாலின் கட்டுப்பாட்டுக்குள் வருவதை எப்படி அனுமதிக்கும்?
லோக்பாலின் கட்டுப்பாட்டுக்குள் சி.பி.ஐ. வராவிட்டாலும், சி.பி.ஐ.-க்கு இணையான ஒரு புலனாய்வு அமைப்பை அதே அதிகாரத்துடன் உருவாக்கி, லோக்பாலுடன் இணைந்த அமைப்பாகச் செயல்படச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் ஒரு மாற்றுத்திட்டமாக முன் வைக்கப்பட்டது. ஆனால் அது குறித்து மத்திய அரசு எந்த முடிவும் எடுத்திருப்பதாகத் தெரியவில்லை.
இரண்டு புலனாய்வு அமைப்புகள் இருப்பதும் அவசியமில்லாதது. தேர்தல் ஆணையம், தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.ஜி.)போல மத்தியப் புலனாய்வுத் துறையையும் அரசியல் சட்ட அமைப்பாக மாற்றுவது அல்லது "லோக்பால்' அமைப்பின்கீழ் கொண்டுவருவது, இவை இரண்டில் ஒன்றுதான் சரியாக இருக்கும்.
அண்மையில் குஜராத் மாநிலத்தில் "லோக் ஆயுக்தா' நீதிபதி நியமனத்தை, மாநில அரசு மட்டுமே தீர்மானிக்க முடியும் என்று அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி கடுமையாக வாதாடிப் பார்த்தார். நீதிமன்றத்தில் கூட அவரது வாதம் எடுபடவில்லை. "மத்திய அரசுப் பிரதிநிதியாகிய ஆளுநர் அந்த நியமனங்களைச் செய்தது சரிதான்' என்று தீர்ப்பு வந்தது. இப்போதுள்ள திருத்தத்தில், "லோக் ஆயுக்தா' நியமனங்களை மாநில அரசுகளே முடிவு செய்துகொள்ளலாம் என்று சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இது, காங்கிரஸ் ஆளும் கட்சியாக இல்லாத மாநில முதல்வர்களுக்குத் திருப்தியளிக்கக்கூடும். யார் கண்டது? லோக்பால் மசோதா நிறைவேற எதிர்க்கட்சிகளுடன் நடத்தப்பட்ட பேரமாகக்கூட இது இருக்கலாம்.
லோக்பால் கொண்டு வந்ததாக இருக்க வேண்டுமே தவிர, அதற்கு எந்தவித அதிகாரமும் இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது மத்திய அரசு. பாம்பு கீரிப்பிள்ளை சண்டையைக் கடைசி வரை காட்டாமலேயே காலம் தாழ்த்த முடியாததால், பாம்பின் பல்லைப் பிடுங்கிவிட்டு களத்தில் இறக்குகிறார்கள். இனி கீரிப்பிள்ளைகள் அஞ்சாமல் பாம்புகளை எதிர்கொள்ளும்!

"உங்கள் பணம் உங்களுக்கே' என்ற திட்டத்தில் தில்லுமுல்லு செய்ய
வாய்ப்புள்ளது. சரியான நடைமுறை இல்லாத காரணத்தால், ஆதார அட்டையை வைத்து
ஏமாற்றப்பட்டவர்கள் வழக்குத் தொடர முடியுமா?
யுனீக் அடையாள ஆதார அட்டை மூலம் அவ்வளவு சமூகப்பாதுகாப்பு வழங்கல்களையும் - அதாவது முதியோர், விதவை பென்ஷன், மகப்பேறு மற்றும் கல்வி உதவித்தொகை எல்லாவற்றையும் வங்கிக் கணக்குக்கு மாற்றும்போது புதிய சிக்கல்கள் உருவாகும். இதுநாள் வரை அஞ்சலகத்தில் முதியோர் பென்ஷன் வாங்கியவர் பொதுவங்கியில் கணக்குத் தொடங்கி அஞ்சலகத்திலிருந்து வங்கிக்கு மாற்றப்படும் வரை எத்தனை அலைச்சல்கள் ஏற்படுமோ? இப்போதே வங்கிகளில் கூட்டம் தாள முடியவில்லை.
வங்கிகளில் செல்வாக்கில்லா வாடிக்கையாளர்களுக்கு எப்படி "மரியாதைகள்' வழங்கப்படுகின்றன என்பனவெல்லாம் நாடறிந்த உண்மை. முதியோர் பென்ஷனை அலைந்து திரிந்து வாங்க, தன்னை வங்கியில் ருசுப்படுத்துவதற்குள் அவர் பரலோகத்திற்கேப் போய்விடலாம்.
நூறு நாள் குளத்து வேலைத்திட்டம்போல் இதைச் செயல்படுத்த முடியாது. நூறு நாள் வேலைத்திட்டமும் சமூகப் பாதுகாப்பின் அம்சமாகத் தோன்றினாலும் விவசாய வேலைகள் பாதிப்புற்றுப் புஞ்செய் விவசாயம் - குறிப்பாக எண்ணெய் வித்துப் பயிர்கள், பருப்பு வகைப் பயிர் விவசாயம் குறைந்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. ஊழல் மறுபக்கம் என்றாலும் சில மாநிலங்களில் சில மாவட்டங்களில் மட்டும் உருப்படியான பணி நிகழ்ந்துள்ளது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் மறு வெற்றிக்கு நூறு நாள் வேலைத்திட்டம் கை கொடுத்ததுபோல் யூனிக் அடையாள ஆதார அட்டை மூன்றாம் முறை ஆட்சியைக் கைப்பற்ற, முன்னோடி (பைலட்) திட்டமாகச் சில இடங்களில் மட்டும் செயல்படுத்தப்பட்டு தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஆறப்போட்டு விடலாம். ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் திட்டத்தின் தோல்விக்குரிய காரணங்களைக் கூறி சமாளித்துவிடலாம். பைலட் திட்டத்திற்குப் பணம் ஆறாக ஓடவிடப்படலாம்.
கடந்த பல ஆண்டுகளாகவே உலக வங்கி, உலக வர்த்தக அமைப்பு, உலக நிதியம் போன்ற அமெரிக்கக் கைப்பாவைகள் உணவு மானியம், உர மானியம் ஆகியவற்றை ரத்து செய்யும்படி ஆலோசனை கூறி வருகிறது.
அமெரிக்காவும் இதை வலியுறுத்தி வந்துள்ளது. உணவு மானியத்தையும் நிறுத்த வேண்டும். அமெரிக்காவையும் திருப்திப்படுத்த வேண்டும். அதேசமயம் மூன்றாவது தேர்தல் வெற்றிக்கும் திட்டமிட வேண்டும் என்ற இலக்கில் "உங்கள் பணம் உங்களுக்கே' என்ற கோஷம் எழுந்துள்ளது.
துரிதகதியில் யுனீக் அடையாள ஆதார காகிதங்கள் "பிட் நோட்டீஸ்'போல் வழங்கப்படுகின்றன. அப்படியே உணவு மானியம் ரத்தாகி அந்த மானியத் தொகை வங்கிக்கணக்கில் பயனீட்டாளர்களுக்கு வழங்கப்படுவதைச் செயல்படுத்தினால் தமிழ்நாடு அரசு வழங்கி வரும் இலவச அரிசித்திட்டம் செயல்படுமா?
ஏனெனில் மாநிலங்களுக்குப் பொது வினியோக அரிசி மத்தியத் தொகுப்பிலிருந்துதான் வழங்கப்படுகிறது. உணவு மானியத்தைப் பணமாக வழங்கும்போது யுனீக் அடையாள ஆதார அட்டைப்படி குடும்பத் தலைவர் கணக்கில் வரவாகும். அப்பணத்தைக் கொண்டு அவர் வெளி அங்காடியில் விலை உயர்ந்த அரிசி வாங்குவாரா? விலை மலிந்த "டாஸ்மாக்' சரக்கு வாங்குவாரா? வறுமைக்கோட்டில் வாழக்கூடிய ஆண்களில் சுமார் 60 சதவீதம் பேர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள்; உணவு மானியம் ரத்தானால் மது விற்பனை உயரலாம். இதைப் பெண்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.
உங்கள் பணம் உங்கள் கையில்தான் என்ற நிலை மாறி ""எங்கள் பணம் ஆண்கள் கையில் போய்விட்டதே'' என்று பெண்கள் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவாக ஓட்டுப் போடுவார்களா

Subscribe to:
Posts (Atom)